ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தோணித்துறை, தோப்புக்காடு கிராம மீனவர்கள் தனியார் கேளிக்கை விடுதியை மூடவலியுறுத்தி காதில் பூ அணிந்து சப்கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் செய்தனர்.
ராமநாதபுரத்தில் கடல்தொழிலாளர் சங்கம், மீனவர்களுடன் இணைந்து மண்டபம் பேரூராட்சி தோணித்துறை, தோப்புக்காடு பகுதியில் உள்ள தனியார் கேளிக்கை விடுதியால் அமைதியான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மீன்பிடி தொழிலுக்கு தொடர்ந்து இடையூறு செய்வதாக புகார் தெரிவித்து மீனவர்கள் வழிவிடு முருகன்கோயில் அருகே கூடினர்.அங்கிருந்து ஊர்வலமாக தாலுகா அலுவலகம் செல்ல இருந்தவர்களை போலீசார் தடுத்து சப்கலெக்டரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துசென்றனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து மீனவர்கள் சப்கலெக்டர் அலுவலக வளாகத்தில் காதில் பூ அணிந்து, கேளிக்கை விடுதியை உடனடியாக மூடுவதற்கு அதிகாரிகள் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க வலியுறுத்தி தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE