கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'டார்ச் லைட்' கேட்டு கமல் கட்சி வழக்கு

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கட்சி நிர்வாகியான, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா தாக்கல் செய்த மனு:கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில், எங்கள் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம்

சென்னை : நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்க கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கட்சி நிர்வாகியான, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மவுரியா தாக்கல் செய்த மனு:கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத் தேர்தலில், எங்கள் கட்சிக்கு, 'பேட்டரி டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது, புதுச்சேரியில் மட்டும், அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு, பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்., மக்கள் கட்சிக்கு, அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.தேர்தல் சின்னம் ஒதுக்கீடு உத்தரவுப்படி, எங்கள் கட்சிக்கு, பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை பயன்படுத்த, எம்.ஜி.ஆர்., மக்கள் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வில், விசாரணைக்கு வந்தது. பேட்டரி டார்ச் லைட் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி, மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. பதில் பெற அவகாசம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் தரப்பில் கோரப்பட்டது.இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, பிப்., 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
05-ஜன-202114:19:41 IST Report Abuse
ocean தான் ஆட்சிக்கு வந்தால் ஆட்சியில் உள்ளவர்களும் அரசாங்க அலுவலர்களும் வாங்கும் லஞ்சத்தை டார்ச் லைட் அடித்து கண்டு பிடிக்கவும் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஊழலை தடுக்கவும் டார்ச் லைட் சின்னம் கேட்டிருக்கிறார். இது வரை எல்லாத்திலேயும் ஊழல் நடந்துள்ளது இனி டார்ச் லைட்டிலும் ஊழல் வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X