ராமநாதபுரம் : திருவாடானை அருகே நாகனி, அலங்கூரணி கிராமத்தில் மாவிலங்கை கண்மாய் நிரம்பி வடிகால் வசதியின்றி, அருகேயுள்ள வயலில் தண்ணீர் சென்றதால் பயிர் மூழ்கி அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நாகனி, அலங்கூரணி பகுதியில் ஆண்டுதோறும் 100 ஏக்கரில் நெல்சாகுபடி நடக்கிறது. இவ்வாண்டு ஓர் அளவிற்கு மழைபெய்து நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.இந்தநிலையில் சமீபத்தில் பெய்த மழையால் மாவிலங்கை கண்மாய் நிரம்பி உள்ளது. உபரிதண்ணீர் செல்ல வழியின்றி அருகேயுள்ள விளைநிலங்களில் தேங்கியுள்ளது. அறுவடை பாதிக்கப்பட்டு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
நாகினி, அலங்கூரணியை சேர்ந்த விவசாயிகள் ராஜேந்திரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கூறுகையில், 'நெல் அறுவடை சமயத்தில் 15 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. நெல்மணிகள் உதிர்ந்தும் அழுகியும் வருகின்றன.திருவாடானை தாசில்தார் வரை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துஉள்ளோம். கலெக்டராவதுகண்மாய் தண்ணீரை வெளியேற்ற கல்வெட்டு அமைக்க உத்தரவிட வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE