கோவை:'ஏப்., 2020 முதல் செப்., 2020 வரையான இ.எஸ்.ஐ., பங்களிப்பை வரும் 15ம் தேதி வரை ஆன்லைனில் செலுத்தலாம்' கோவை இ.எஸ்.ஐ., துணை மண்டல இணை இயக்குனர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:இ.எஸ்.ஐ., கார்ப்பரேஷன், தொழிலாளர்கள் மாநில காப்பீடு(பொது) விதிமுறைகள், 1950ன் விதி, 26ஐ தளர்த்தியுள்ளது. இதன்படி, கடந்தாண்டு, ஏப்., முதல் செப்., வரை உள்ள, பங்களிப்பு காலத்துக்கு, பங்களிப்பு காலம் முடிவடைந்த, 42 நாட் களுக்குள், இ.எஸ்.ஐ., பங்களிப்பு செய்ய முடியாத தொழிலதிபர்கள், அந்த பங்களிப்பை, வரும் 15ம் தேதி வரை, ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.இது, 2020 ஏப்., முதல் செப்., வரையிலான பங்களிப்பு காலத்துக்கு மட்டுமே பொருந்தும். பிற பங்களிப்புகளுக்கான கால வரம்பில், எந்த தளர்வும் இல்லை. இத் தகைய தளர்வு பிற பழைய அல்லது அல்லது புதிய பங்களிப்பு காலத்துக்கு நீட்டிக்கப்படவில்லை.தொழிலாளர்கள், தொழில திபர்கள் நலனில் அக்கறையை கருத்தில் கொண்டு, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை இ.எஸ்.ஐ., மேம்படுத்தி வருகிறது.மேலும் விபரங்களுக்கு, இ.எஸ்.ஐ.சி., இணையதளம் www.esic.nic.in அல்லது இ.எஸ்.ஐ.சி., கிளை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE