பரமக்குடியில் காவிரி நீர்குழாய் உடைப்பு; குடிநீரில் கழிவுநீர் கலப்பு| Dinamalar

பரமக்குடியில் காவிரி நீர்குழாய் உடைப்பு; குடிநீரில் கழிவுநீர் கலப்பு

Added : ஜன 05, 2021
Share
பரமக்குடி : பரமக்குடி பாரதி நகர் நெடுஞ்சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்வீணாகி வருகிறது. இத்துடன் கழிவுநீர் கலப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 614 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை

பரமக்குடி : பரமக்குடி பாரதி நகர் நெடுஞ்சாலையோரம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர்வீணாகி வருகிறது. இத்துடன் கழிவுநீர் கலப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 614 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.நெடுஞ்சாலை ஓரங்களில் பிரதான குழாய் பதிக்கப்பட்டு அடுத்தடுத்த கிராமப்புறங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து ஒட்டப்பாலம் வரை நெடுஞ்சாலையோரம் பாரதி நகர் பகுதியில் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.10 நாட்களாக அப்பகுதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதுடன் மீண்டும் அதே குழாயில்கழிவுநீர் கலந்து சப்ளை ஆகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X