சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கோவை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். செயலாளர் சுமதி பேசுகையில், ''விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு அதற்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெற வேண்டும்,'' என்றார். மாவட்ட நிர்வாகிகள் கலா,

கோவை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் நிர்மலா தலைமை வகித்தார். செயலாளர் சுமதி பேசுகையில், ''விவசாயிகளுக்கு எதிராக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மாநில அரசு அதற்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெற வேண்டும்,'' என்றார். மாவட்ட நிர்வாகிகள் கலா, நந்தினி, லதா, பூங்கோதை, ரங்கநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏழைகளுக்கு போர்வைகோவை: தடாகம் சாலை இடையர்பாளையத்துக்கு அருகிலுள்ள குடிசை பகுதியில், பனிக்குளிரால் தவிக்கும் ஏழைகளுக்கு, அண்ணா நகர் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பாக, 200 பேருக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. சங்க தலைவர் துரைபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.அனுவாவி சுப்ரமணியர் கோவிலில் பூஜைகோவை: கோவை பெரியதடாகத்திலுள்ள அனுவாவி சுப்ரமணியர் கோவிலை ஒட்டி, அகத்தியர் வாழ்ந்த குகை உள்ளது. அகத்தியரின் ஜென்மநட்சத்திரம்ஆயில்யம்.இங்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. சமூக இடைவெளி பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.-மலைவாழ் மக்களுக்கு கம்பளி, மப்ளர்கோவை: கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில், மலைவாழ் மக்களுக்கு கம்பளி, மப்ளர் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.காடம்பாரை அணை மற்றும் மின் உற்பத்தி நிலையம் பகுதியில் உள்ள காட்டுப்பட்டி மற்றும் மாவடங்கு ஆகிய மலை கிராமங்களில் உள்ள, 200 குடும்பங்களுக்கு கம்பளி, மப்ளர், குரங்கு குல்லாய், இனிப்புகள் வழங்கப்பட்டன. நிழல் மையம் சார்பில், உணவு வழங்கப்பட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் செயலாளர் வேலு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேற்கு மண்டல போலீஸ் நக்சல் தனிப்பிரிவு எஸ்.ஐ., உதயகுமார், நிழல் மையத்தின் முருகன், சமூக சேவகி பவ்லின் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முதியவர்களிடம் எரிந்து விழுவதா!கோவை: கோவைப்புதுார் தபால்நிலையத்தில், கடந்த 1ம் தேதி பென்சன் தொகை வாங்க வந்த ஓய்வூதியர்களை, சர்வர் பழுது என ஊழியர்கள்திருப்பி அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, அடுத்த நாள் தபால்நிலையத்தில் பென்சன் வாங்க, நிறைய முதியவர்கள் சென்றிருந்தனர். ஆனால், சேமிப்பு வங்கி கவுன்டரில் பணிபுரியும் பெண் ஊழியர், 12:00 மணிக்கு மேல் வந்த முதியவர்களுக்கு, பென்சன் வழங்க மறுத்து விட்டார். முதியவர்களிடம் ஊழியர் எரிச்சலுடன் பேசியுள்ளார். பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முதியவர்களிடம் தொடர்ந்து அவர், மரியாதை குறைவாகநடந்து கொள்வதாக, ஓய்வூதியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X