ராமநாதபுரம் : ராமநாதபுரம் தாய்பாசம் அறக்கட்டளையினர் மனநலம் பாதித்து, பட்டினியால் சிரமப்படும் நபர்களை கண்டறிந்து மீட்டுவரும் சேவை செய்கின்றனர்.ராமநாதபுரம் நகர், புறநகர்பகுதியில் மனநலம்பாதித்தவர்கள், ஆதரவற்றவர்கள் பலர் சுற்றித்திரிகின்றனர். இவர்கள் போதிய உணவு கிடைக்காமல் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அம்மாதிரியான நபர்களை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணியில் ராமநாதபும் தாய்பாசம் அறக்கட்டளையினர் ஈடுபடுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வடமாநிலத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மொட்டையடித்து, குளிக்கவைத்து புத்தாடை அணிவித்து அவரை ஏர்வாடி தர்காவில் சேர்க்க ஏற்பாடு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE