பொது செய்தி

தமிழ்நாடு

சட்டமன்ற தேர்தலில் போட்டி; ராமநாதபுரம் காங்., திட்டம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்., போட்டியிட திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறினார். ராமநாதபுரத்தில் காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி.,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியில் காங்., போட்டியிட திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறினார்.

ராமநாதபுரத்தில் காங்., நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் விலைவாசி உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. விவசாயிகளுக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

கட்சியை வலுப்படுத்த வட்டார நிர்வாகிகளை நேரடியாக சந்திக்க உள்ளோம். கிராமம்தோறும் 25பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணிகட்சிகள் ஒத்துழைப்புடன் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட திட்டம் உள்ளது. கோஷ்டி பூசல்களை மறந்து அனைவரும் ஒன்றாக செயல்படுவோம்,' என்றார். மாநில செயற்குழு உறுப்பினர் பாரிராஜன், தேசியக்குழு உறுப்பினர் செந்தாமரை கண்ணன், ராமநாதபுரம் செய்தி தொடர்பாளர் கவுசிமகாலிங்கம், நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X