கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., இல்லம் கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கின் விசாரணை, 11க்கு தள்ளிவைப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் கையகப்படுத்தப் பட்டது; அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, வரும், 11ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. சட்டப்பூர்வ வாரிசுஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக, அவரது சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையில், ஜெ.,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் கையகப்படுத்தப் பட்டது; அதற்கு இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, வரும், 11ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

சட்டப்பூர்வ வாரிசுஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக, அவரது சகோதரர் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையில், ஜெ., வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவில்லமாக மாற்ற, அரசு கையகப்படுத்தியது. அதற்கு இழப்பீடாக, 68 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு, சிவில் நீதிமன்றத்தில் செலுத்தப் பட்டது. இதையடுத்து, போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட்டு, சாவியை ஒப்படைக்க கோரி தீபக்; 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்ததை எதிர்த்து தீபா, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி சேஷசாயி முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் மனோகரன் ஆஜராகி, ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்து விட்டதாகவும், மற்றொரு வழக்கில் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, வரும், 11ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.வருமான வரி பாக்கிஜெ., செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி விபரங்களை வழங்க கோரி, தீபக் தாக்கல் செய்த மனு, நீதிபதி அனிதா சுமந்த் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சுதர்சனம் ஆஜராகி, ''விபரங்கள் கேட்டு அளித்த மனு மீது, வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை,'' என்றார். வருமான வரித் துறை சார்பில், வழக்கறிஞர் சீனிவாஸ், ''விபரங்கள் கோரி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை அணுக வேண்டும்,'' என்றார். இதையடுத்து, வருமான வரித் துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 28ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X