மாப்பிள்ளை கம்பெனிக்கு 'பளபள' ரோடு... மாமனார் போட்ட 'பக்கா பிளானை' பாரு!

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்டாண்டில், டூ வீலரை பார்க்கிங் செய்து விட்டு, தங்கள் தோழியை சந்திக்க, பஸ்சில், சென்று கொண்டிருந்தனர், சித்ராவும், மித்ராவும்.வழிநெடுக உள்ள கிராமப்புற ரோடு முழுக்க குப்பை சிதறி கிடக்க, ''கொஞ்ச நாளா, கிராமங்களில், சரியா வேலை நடக்கறது இல்லை,'' என்றாள் மித்ரா.''ஆமான்டி. நம்ம ஊர்ல ஊராட்சி வேலைகளை கவனிக்கிற மாவட்ட ஆபீசர்களுக்கு,
 மாப்பிள்ளை கம்பெனிக்கு 'பளபள' ரோடு... மாமனார் போட்ட 'பக்கா பிளானை' பாரு!

திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள ஸ்டாண்டில், டூ வீலரை பார்க்கிங் செய்து விட்டு, தங்கள் தோழியை சந்திக்க, பஸ்சில், சென்று கொண்டிருந்தனர், சித்ராவும், மித்ராவும்.

வழிநெடுக உள்ள கிராமப்புற ரோடு முழுக்க குப்பை சிதறி கிடக்க, ''கொஞ்ச நாளா, கிராமங்களில், சரியா வேலை நடக்கறது இல்லை,'' என்றாள் மித்ரா.

''ஆமான்டி. நம்ம ஊர்ல ஊராட்சி வேலைகளை கவனிக்கிற மாவட்ட ஆபீசர்களுக்கு, கோவை மாவட்டத்துல இருக்க ஊராட்சி வேலைகளை கண்காணிக்கிற பொறுப்பும் கொடுத்திருக்காங்க. அங்க இருந்த ஆபீசர், அந்த ஊரு மினிஸ்டரின் கோபத்துக்கு ஆளானதால 'வெயிட்டிங் லிஸ்டில்' வச்சுட்டாங்களாம்

.அதனால, அமைச்சரின் 'ஆசி'யை பெற, நம்ம ஊரு பொறுப்பு அதிகாரி, 'டாலர் சிட்டி'ல இருக்கற நேரத்தைவிட, அங்கு தான், அதிகமா இருக்கறாராம். அதனால தான், நம்ம ஊர்ல இருக்க கிராம ஊராட்சி மேனேஜ்மென்ட் படுமோசமா போச்சுன்னு, பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

''என்ன ரூபன்… ரமேஷூக்கு பதில் நீங்க தான் அவரோடு வேலைய பாக்கறீங்க போல'' என, பக்கத்து சீட்டில் இருந்தவர், யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தது, காதில் விழுந்தது.

''இதே மாதிரிதான்க்கா, ெஹல்த் டிபார்ட்மென்ட்ல, மாவட்ட மகப்பேறு குழந்தைகள் நல ஆபீசரா இருந்த ஒருத்தர, ராணிபேட்டைக்கு டிரான்ஸ்பர் பண்ணாங்க. ஆனா, போன வேகத்துல திரும்பவும், இங்கயே டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துட்டாராம்,'' என்றாள் மித்ரா.

''இப்ப இருக்க 'புனித'மான அரசியல்ல, 'டிரான்ஸ்பர்' விவகாரத்துல தான், எலக்ஷன் வேலைக்கே, ஆளுங்கட்சிக்காரங்க பணம் சேர்க்கிறாங்க போலடி,''காங்கயம் ரோட்டில் பஸ் சென்ற போது, அ.தி.மு.க., கட்சி அலுவலக கட்டுமான பணி கண்ணில் தென்பட, சித்ரா தொடர்ந்தாள்.

''ஏற்கனவே, அ.தி.மு.க., மாவட்ட ஆபீஸ் இருந்தாலும், காங்கயம் ரோட்டில தற்காலிக மாவட்ட ஆபீஸ் கட்ற வேல மளமளன்னு நடந்துட்டு இருக்கு. கோஷ்டி பூசல் காரணமா, தன்னோட ஏரியாவுக்குள்ளயே கட்சி ஆபீஸ் வைக்கற வேலைய 'சவுத்' ஆரம்பிச்சிட்டாருன்னு, அவங்க ஆட்களே பேசறாங்க,''

''ஒருவேளை அடுத்த, மா.செ., பதவிக்கு காய் நகர்த்துறார் போல'' என, சிரித்த சித்ரா, அடுத்த விஷயத்துக்கு தாவினாள்.''பத்திரப்பதிவு அலுவலக முறைகேடு தொடர்பா, தீவிரமா விசாரணை நடந்துட்டு இருக்கு. இதுல, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, 'முன்னோர் சொத்து'ன்னு சொல்லி, போலி டாக்குமென்ட் தயாரிச்ச, வடக்கு வி.ஐ.பி., பிரதர்ஸ் பேரும் அடிபடுதாம்,''

''அவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்னு, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் தரப்புல புகார் மனுவும் போயிருக்குது. ஆனா, ரெவின்யூ, பத்திரப்பதிவு ஆபீசர்ஸ் ரொம்பவும் 'சைலன்டா' இருக்காங்களாம்,'' என்றாள்.

''ஆமாக்கா, இது, 'சிட்டிங்' எம்.எல்.ஏ., 'மாஜி' ஊராட்சி தலைவர்ன்னு உள்ளூர் வி.ஐ.பி.,க்கள் சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு, ஏற்கனவே, பேச்சு இருந்துகிட்டு தானே இருக்கு. ஆனா, இப்ப இது ஸ்பீடாயிடுச்சு,'' என்றாள் மித்ரா.

ரோட்டின் மையத்தடுப்பு முழுக்க அரசியல் கட்சிகளின் விளம்பர போஸ்டர் வைத்து ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது, கண்ணில் தென்பட,''காங்கிரசிலிருந்து, தாமரை கட்சிக்கு தாவிய பெண்கள் பிரிவு நிர்வாகிக்கு, பொறுப்பு கொடுத்திட்டாங்க. இன்னும், சில நிர்வாகிகளையும் இழுக்க, வேலை ஜரூரா நடக்குதாம். இந்த மாசம், மாநில தலைவரு, வர்றதா 'பிளான்' இருக்கு. இப்ப போய், நிர்வாகிங்க கட்சி தாவிட்டு இருக்காங்க. என்ன செய்றதுன்னு தெரியாம, மாவட்ட தலைமை கையை பிசைஞ்சுகிட்டு இருக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடப்பதால், நீண்ட துாரம் சுற்றி சென்ற பஸ் ஒருவழியாக, பல்லடம் சென்றது. இருவரும், ஒரு ஆட்டோவில் பயணித்தனர். அவரப்பாளையம் பிரிவு அருகிலுள்ள வெங்கடேஸ்வரா நகர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர்.''என்ன மித்து… வண்டி, வாகனம் கம்மியா போற இந்த ரோட்ல, இவ்வளவு சூப்பரா ரோடு போட்ருக்காங்க,''

''அந்த ரோடு முடியற இடத்தில, பல்லடம் வி.ஐ.பி., மாப்ளயோட பேக்டரி இருக்காம். அதுக்கு போய்ட்டு வர வசதியா தான், அரசாங்க பணம், 16 லட்சம் ரூபாய கொட்டி ரோடு போட்டிருக்காங்க,'' என்றாள் மித்ரா.

''ஆளுங்கட்சின்னா இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் செய்யலாமா? விடுடி மக்கள் பார்த்துக்குவாங்க,'' சொன்ன சித்ரா, ''கோவில்கள்ல கூட ரிடையர்டு ஆபீசர்ஸ் ஆதிக்கம் தாங்கலையாம்,'' என்றாள்.

''இது, எங்கீங்க்கா?''''அவிநாசிக்கு பக்கத்தில இருக்க கருவலுாரிலதான். மாரியம்மன் கோவில்ல, ரிட்டையர்டு ஆன ஒருத்தரை கேட்டு தான், இப்ப இருக்க ஆபீசர் வேல செய்றாராம். இதனால, பூஜைக்கு தேவையான பொருட்களை கூட, கேட்டு வாங்க முடியாம பூசாரிங்க புலம்பி தள்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.

அப்போது, மொபைல் போன் சிணுங்க, ''யாரு, 'சுந்தரம்' அங்கிளா? வீட்ல எல்லாரும் சவுக்யமா?,'' என இரண்டு நிமிடம் பேசி விட்டு, இணைப்பை துண்டித்தாள்.

''கரெக்டாதான்டி சொன்னே. அதேபோல, அவிநாசிக்கு பக்கத்தில உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில, 200 வருஷம் பழமையான ஒரு சிவன் சிலை இருந்துச்சு. கேரளாவில் இருந்து சில சாமியார்கள கூட்டிட்டு வந்து, அத எடுத்துட்டு போய்ட்டாங்கன்னு பேசிக்கிறாங்க. ரெவின்யூ டிபார்ட்மென்ட் காரங்க கிட்ட கேட்டா, நாங்க இன்ஸ்பெக்ஷன் போனப்ப, அந்த மாதிரி சிலையே இல்லைன்னு சொல்லிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.

''கடவுள் விஷயத்துலயும் ஏன் இப்டி பண்றாங்களோ''ன்னு புலம்பிய சித்ரா, ''கரைப்புதுார், சின்னக்கரை, அருள்புரம் ஏரியாவில, கஞ்சா, பான்பராக், ஹான்ஸ் வியாபாரம் பட்டைய கிளப்புதாம். கூலி தொழிலாளிங்க மட்டுமில்லாம, காலேஜ் ஸ்டூடண்ட்ஸூம் அடிமையாயிட்டு வர்றாங்க,''

''மாமூல் போறதால, போலீசும் கண்டுக்கறதே இல்லையாம். அதனால, போலீஸ்காரங்கள கூண்டோட மாத்தணும்னு எல்லாருமே பேசறாங்க,'' என ஆவேசப்பட்டாள்.வந்த வேலை முடிந்ததால், மீண்டும் பஸ் ஏறி, திருப்பூர் திரும்பினர் சித்ராவும், மித்ராவும்.

''சிட்டி போலீஸ்காரங்க ரொம்பவே புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க மித்து,''

''ஆமாங்க்கா , நானும் கேள்விப்பட்டேன், 'நார்த் ரேஞ்ல' இருக்க 'கிளப்' மூலமா, போலீஸ்காரங்க காட்டில மாமூல் மழை, இந்த குளிர்காலத்தில பெய்யுதுன்னு போன வாரம் பேசினோம்ல. இந்த விஷயத்துல, கமிஷனர் ரொம்பவே டென்ஷன் ஆகிட்டாராம்,''

''உடனே, சிலரை வச்சு, 'ரெய்டு' போக சொல்லிட்டு, ஸ்டேஷன்களுக்கு 'மெமோ' கொடுத்துட்டாரு. இதனால, 'கிளப்'காரங்க மூலமா பாக்கெட்டை நிரப்பின போலீஸ்காரங்க, 'ஷாக்' ஆகிட்டாங்களாம். இதுல என்ன விசேஷம்ன்னா. கமிஷனரின் கெடுபிடி அதிகமாகிடுச்சுன்னு சொல்லி, கமிஷன் அமவுன்ட்டை ஏத்திட்டாங்களாம்,''

''அடக்கொடுமையே. இவங்கெல்லாம் எப்ப தான் திருந்தப் போறாங்களோ…'' என்ற மித்ரா,

''கமிஷனர் ஆபீஸ் பக்கத்துல இருக்குற ஸ்டேஷன்ல வேலை செய்ற ஒரு குட்டி ஆபீசர், ஸ்டேஷனுக்கு ஒழுங்கா வர்றதே இல்லையாம்; 'டியூட்டியும்' பார்க்கறது இல்லையாம்,''''அதனால, அவருக்கு 'ஆப்சென்ட்' போட்டிருக்காங்க. இது தெரிஞ்சு, டென்ஷனான அவரு, ஸ்டேஷனில் ஒரே அலப்பறை பண்றாராம்,'' என்றாள்.

''ஹலோ…யாரு? பிச்சைமணியா, பஸ்ல வந்துட்டு இருக்கேன். சிக்னல் சரியா இல்ல. இறங்கிட்டு கூப்பிடறேன்'' என, பக்கத்து சீட்டில் இருந்தவர், கொஞ்சம் சத்தமாக பேசினார்.

''அவிநாசி ரோட்டுல, இருக்க சூரியக்கட்சிய சேர்ந்தவரோட ஓட்டலில் தப்பான சங்கதி நடந்துட்டு இருக்காம். இத தெரிஞ்சும், போலீஸ்காரங்க சைலன்ட்டா இருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.

''ஆமாங்க்கா. பக்கத்து வீட்ல இருக்க தினேஷ்குமார் அண்ணா கூட இதைப்பத்தி சொல்லியிருக்கார்,'' ஆமோதித்தாள் மித்ரா.

''எல்லாம் பணம் படுத்தற பாடுடி மித்து. உழைச்சு சம்பாதிக்கிற பணமே நிக்க மாட்டேங்குது. இப்படி அநியாயமா சம்பாதிச்சு என்ன பண்றாங்கன்னு தெரியல'' என சித்ரா கூறவும், பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது.இருவரும் இறங்கி, டூவீலர் ஸ்டாண்ட் நோக்கி நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X