திருப்பூர்:திருப்பூர் வடக்கு உழவர் சந்தைக்கு, கடந்தாண்டு, 30,522 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 9.86 லட்சம் பேர், காய்கறி, பழங்கள், கீரை வாங்க சந்தைக்கு வந்தனர். 8,120 மெட்ரிக் டன் காய்கறி வந்துள்ளது. 26.30 கோடி ரூபாய்க்கு காய்கறி வர்த்தகம் நடந்துள்ளது.கடந்த 2019ல், 39.42 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. காய்கறி வரத்து, 12,718 மெட்ரிக் டன்னாக இருந்தது. கடந்தாண்டு கொரோனா பரவல், முழு ஊரடங்கு, சந்தைக்கு விடுமுறை உள்ளிட்ட காரணங்களால், 25 நாட்களுக்கு மேலாக சந்தை முழு அளவில் இயங்கவில்லை. இதனால், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் காய்கறி வரத்து, 4,598 மெட்ரிக் டன் வரையிலும், வருவாய், 13 கோடி ரூபாய் வரையிலும் குறைந்துள்ளது.கடந்த, 2019ல், 15 லட்சமாக இருந்த வாடிக்கையாளர் வருகை, கடந்த ஆண்டு, ஒன்பது லட்சமாக குறைந்து விட்டது. சந்தைக்கு காய்கறி கொண்டு வரும் விவசாயிகள் எண்ணிக்கை, 48 ஆயிரத்தில் இருந்து, 30 ஆயிரமாக, கடந்தாண்டு குறைந்திருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE