பொது செய்தி

தமிழ்நாடு

சிங்கம்புணரியில் அகலமாகும் சாலை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.திண்டுக்கல்- காரைக்குடி சாலை உள்ளிட்ட ஏழு மாநில நெடுஞ்சாலைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இச்சாலைகளை பலப்படுத்தி அகலப்படுத்தும் பணி நடக்கிறது. என்.எச்.383 எண் கொண்ட திண்டுக்கல்- காரைக்குடி சாலை

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

திண்டுக்கல்- காரைக்குடி சாலை உள்ளிட்ட ஏழு மாநில நெடுஞ்சாலைகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவித்தது. இதனை தொடர்ந்து இச்சாலைகளை பலப்படுத்தி அகலப்படுத்தும் பணி நடக்கிறது. என்.எச்.383 எண் கொண்ட திண்டுக்கல்- காரைக்குடி சாலை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கிறது.

திண்டுக்கல் முதல் நத்தம் வரை ரூ.240 கோடி செலவிலும், நத்தம் முதல் கொட்டாம்பட்டி வரை ரூ.70 கோடி செலவிலும் சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது.இதன் அடுத்த கட்டமாக கொட்டாம்பட்டி முதல் திருப்புத்துார் வரை ரூ.114 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை உயரப்படுத்தி, இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தப்பட உள்ளது. நகர் புறங்களில் இருபக்கமும் 2 மீட்டர் அகல நடைபாதையும், கால்வாயும் கட்டப்பட உள்ளது.

சாலை நெடுகிலும் தென்புறத்தில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக 2 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் இச்சாலையின் எஞ்சிய பகுதியான திருப்புத்துார்- காரைக்குடி பிரிவிலும் விரைவில் பணிகள் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X