திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் அருகே தி.வைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவர் சன்னதியில் நாளை நடைபெறும் பைரவ அஷ்டமி ேஹாமத்தில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் உள்ள மூல பாலகால பைரவர் கோயிலில் வழக்கமாக தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.யாகசாலையில் கணபதி ேஹாமம், கஜ பூஜை, கோ பூஜை, பைரவ அஷ்டமி ஹோமம் நடைபெறும். பின்னர் யாகசாலையில் இருந்து வரும் புனித கலசநீரால் மூலவர் பைரவருக்கு அபிேஷக, ஆராதனை நடைபெறும்.
மங்கள இசை, திருமுறை பாராயணம், பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும். கொரானா ஊரடங்கை அடுத்து யாகசாலை பூஜை மட்டும் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது. தற்போது அரசு கொரோனா பரவல் தடை விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடைபெற உள்ளது. நாளை மாலை 4:00 மணிக்கு வேதபாராயணம்மற்றும் பைரவ அஷ்டமி ேஹாமம், மூலவருக்கு அபிேஷகம், ஆராதனை மட்டும் நடைபெற உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE