திருப்பூர்:பிரதமர் கிஷான் திட்டத்தில் நடந்த முறைகேடுகளில் ஈடுபட்ட, 13 மாவட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர் மீது, வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்ட அலுவலர்களையும், பணியாளர்களையும், இரண்டு ஒன்றியங்கள் தள்ளி இடமாறுதல் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இரண்டு ஒன்றியங்கள் தள்ளி இடமாற்றம் செய்யும் உத்தரவுக்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.கோர்ட் உத்தரவை செயல்படுத்தக்கோரி, நேற்று 'அட்மா' ஊழியர்கள், அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 'அட்மா' பணியாளர் சங்கத்தினர், பணியை புறக்கணித்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயல் தலைவர் மனோகர் தலைமையில், தொழில்நுட்ப அலுவலர், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE