பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்துக்கு ஒரு காவலர்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
அவிநாசி:'கிராமப்புற காவலர் திட்டம்' என்ற புதிய திட்டம் மூலம், அவிநாசி மற்றும் சேவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு, ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அந்தந்த கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பழங்கரை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அருள், எஸ்.ஐ., செந்தில்குமார்

அவிநாசி:'கிராமப்புற காவலர் திட்டம்' என்ற புதிய திட்டம் மூலம், அவிநாசி மற்றும் சேவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு, ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அந்தந்த கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பழங்கரை ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சியில், டி.எஸ்.பி., பாஸ்கரன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் அருள், எஸ்.ஐ., செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அக்கிராமத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள காவலர், மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டார்.போலீசார் கூறியதாவது:கிராமங்களில் நடக்கும் சட்ட விரோத செயல்கள், குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், சந்தேகப்படும்படியான நபர்களை உடனடியாக தெரியப்படுத்துவதற்கு வசதியாக, ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீசாரின் மொபைல் எண், புகைப்படம் அடங்கிய அறிவிப்பு பலகை, பொதுவான இடத்தில் வைக்கப்படும். பொதுமக்கள் தரும் தகவல் அடிப்படையில், போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் குற்றம் மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பவம் தவிர்க்கப்படும். இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X