அவிநாசி:அவிநாசியில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதற்காக வந்த சபாநாயகர் தனபாலை, தத்தனுார் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் சந்தித்தனர். சபாநாயகரிடம், விவசாயிகள் மனு வழங்கினர்.அதில், 'தத்தனுாரில், சிப்காட் உள்ளிட்ட 2,500 கோடி ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள, எலக்ட்ரானிக் வாகனங்களுக்கான உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் உட்பட எந்தவொரு தொழில் நிறுவனங்களும் அமைக்க கூடாது.எங்கள் கோரிக்கையை ஏற்று, தொழில் கூடம் அமைக்கப்பட மாட்டாது என, முதல்வர் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இந்த அறிவிப்பை, அரசாணையாக வெளியிட வேண்டும்' என்று கூறியிருந்தனர்.சபாநாயகர் கூறியதாவது;தத்தனுாரில் 'சிப்காட்' தொழில்கூடம் வராது என, முதல்வரும் உறுதியளித்துள்ளார். ஒரு விவகாரம் தொடர்பாக, முதல்வரின் அறிவிப்பு என்பது, அரசாணைக்கு நிகரானது. அரசாணை நிறைவேற்ற சில நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது; அவசரமாக அதை செய்ய முடியாது. கண்டிப்பாக, 'சிப்காட்' தொழிற்கூடம் வராது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE