நிலக்கோட்டை : நிலக்கோட்டை அருகே சரக்கு லாரி, இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் திருமணமாகி ஒரு மாதமே ஆன விஜயபிரபாகரன், 30, லியோ அமலஜோசப், 32 சம்பவ இடத்தில் பலியாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மாபட்டியைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகன் விஜயபிரபாகரன். ராஜமாணிக்கம் மகன் லியோஅமலஜோசப். மரியாயிபாளையத்தைச் சேர்ந்த லாரன்ஸ் பிரிட்டோ 30. இம்மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் சங்கால்பட்டியில் இருந்து மைக்கேல்பாளையம் சென்றனர். மூவருமே ெஹல்மெட் அணியவில்லை. மைக்கேல் பாளையத்தில் இருந்து செம்பட்டி நோக்கி சரக்கு லாரி சங்கால்பட்டி பிரிவு அருகே நேருக்கு நேர் மோதியதில் விஜயபிரபாகரன், லியோஅமலஜோசப் சம்பவ இடத்தில் பலியாகினர். விஜயபிரபாகரனுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகிறது. லாரன்ஸ் பிரிட்டோ திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். நிலக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE