அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபை சபாநாயகர் பதவியின் ஆளுமையை பாமரனும் அறியச்செய்தவர் பி.எச்.பாண்டியன்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருநெல்வேலி : ''சபாநாயகர் பதவியின் ஆளுமையை பாமரனும் அறியச் செய்தவர் பி.எச்.பாண்டியன்,'' என அவரது மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவுமண்டபம் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம்

திருநெல்வேலி : ''சபாநாயகர் பதவியின் ஆளுமையை பாமரனும் அறியச் செய்தவர் பி.எச்.பாண்டியன்,'' என அவரது மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் நினைவுமண்டபம் அவரது குடும்பத்தினரால் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் திறந்துவைத்தனர். பி.எச். வரவேற்றார். முதல்வர் பழனிசாமி பேசியதாவது:1985-89 வரை சபாநாயகராக இருநதவர் பி.எச்.பாண்டியன். நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் நிறைவேற நீதிமன்ற ஆணைகளை பெற்றவர். தமிழகத்தில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டபோது 10 ஆயிரம் டன் அரிசி விடுவிக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு ஆணை பெற்றவர்.

1986ல் செங்கற்பட்டு, கிழக்குகடற்கரை சாலையில் 17 ஆயிரம் ஏக்கர் அபகரிப்பு நிலத்தை மீட்டவர். அவரது ஊரான கோவிந்தபேரியில் 5 ஏக்கர் நிலம் தந்து மனோ கல்லுாரி உருவாக காரணமானவர். இவ்வாறு பேசினார்.துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது: பி.எச். பாண்டியன் கற்ற சட்ட நுணுக்கங்கள் சட்டசபையில் அவர் பல சரித்திர நிகழ்வுகளை நடத்தி காட்ட உறுதுணையாக இருந்தது. சட்டசபை வழக்குகளில் அவர் அப்போது சொன்ன சட்டநுணுக்கங்கள் இன்றளவும் எடுத்துக்காட்டப்படுகிறது. என்றார்.

ஒரே வாகனத்தில் வரவேற்புசென்னையில் இருந்து நேற்று மதியம் பழனிசாமி, பன்னீர் செல்வம் ஒரே விமானத்தில் துாத்துக்குடி வந்தனர். அவர்களுக்கு திருநெல்வேலி கருங்குளத்தில் கட்சியினர் வரவேற்பளித்தனர். அப்போது இருவரும் ஒரே ஜீப்பில் சிறிதுதுாரம் பயணித்து வரவேற்பை பெற்றுக்கொண்டனர். பின்னர் அங்கிருந்து ஒரே காரில் நிகழ்ச்சி நடந்த கோவிந்தபேரி சென்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ., முருகையாபாண்டியன் வீட்டிற்கு இருவரும் ஒரே காரில் சென்று விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X