சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

எரிசக்தி சேமிப்பும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாதலும்!

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெருகி வரும் தேவையை ஈடுசெய்யும் அதே நேரத்தில் இறக்குமதியை குறைப்பது, எரிசக்தியை பசுமையாக்குவது, அதை கட்டுப்பாடான விலையில் கிடைக்கச் செய்வது ஆகிய சவாலான, சமயத்தில் ஒன்றுடன் ஒன்று முரண்பாடான இலக்குகளையும் மனதில் வைத்து செயல்பட வேண்டி உள்ளது.மேற்படி இலக்குகளில், இறக்குமதியை குறைப்பது முக்கியமானது. இன்றைய நிலையில்,
எரிசக்தி, விவசாயிகள், எத்தனால்

இந்தியாவின் எரிசக்தி பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெருகி வரும் தேவையை ஈடுசெய்யும் அதே நேரத்தில் இறக்குமதியை குறைப்பது, எரிசக்தியை பசுமையாக்குவது, அதை கட்டுப்பாடான விலையில் கிடைக்கச் செய்வது ஆகிய சவாலான, சமயத்தில் ஒன்றுடன் ஒன்று முரண்பாடான இலக்குகளையும் மனதில் வைத்து செயல்பட வேண்டி உள்ளது.

மேற்படி இலக்குகளில், இறக்குமதியை குறைப்பது முக்கியமானது. இன்றைய நிலையில், நமக்கு தேவையான கச்சா எண்ணெயில், 85 சதவீதத்தையும்; எரிவாயுவில், 56 சதவீதத்தையும் இறக்குமதி செய்து வருகிறோம். இதை குறைக்கும் வண்ணம், மத்திய அரசு, உயிரி எரிபொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, உயிரி எரிபொருட்களான எத்தனால், உயிரி எரிவாயு மற்றும் உயிரி டீசல் உற்பத்தியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், இறக்குமதி சார்பு குறைவதோடு, விவசாயிகளின் வருமானமும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தான். அரசு அவ்வாறு என்னென்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?


எத்தனால்


வரும், 2022க்குள் பெட்ரோலோடு, 10 சதவீதம் எத்தனால் கலப்பது என்ற இலக்கோடு செயல்பட்டு வருகிறது. இதுவே, 2030க்குள், 20 சதவீதமாக அதிகரிக்கப்படும். இதனால், வாகன புகையில் மாசும் குறையும். கடந்த, 2013- - 14ல், 38 கோடி லிட்டராக இருந்த எத்தனால் உற்பத்தி, 2019ம் ஆண்டு, 180 கோடி லிட்டரானது. இந்த ஆண்டு இது, 350 கோடி லிட்டராக உயரும்!எத்தனால் பெரும்பாலும் கரும்பு சார்ந்த மூலப்பொருட்களில் இருந்து தயாராகிறது.கெட்டுப்போன தானியங்கள் உள்ளிட்ட வேளாண் மற்றும் தொழிற்சாலை கழிவுகளும் பயன்படுகின்றன. இந்த வகையில், கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், 35 ஆயிரம் கோடி ரூபாய், கரும்பு மற்றும் சாராய ஆலைகள் வழியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளது. கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு பணப் பட்டுவாடா செய்ய பல மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும் நிலையில், எத்தனால் வாங்கும் எண்ணெய் நிறுவனங்கள் சரியாக, 21 நாட்களில் எத்தனாலுக்கான பணத்தை சாராய ஆலைகளுக்கு கொடுத்து விடுகின்றன. இதனால், சிக்கலை சந்தித்து வரும் கரும்பு துறையில் பணப் புழக்கத்தைக் கூட்டவும், விவசாயிகளுக்கு மாற்று வருவாய் கிடைக்கவும் எத்தனால் உற்பத்தி வழி செய்திருக்கிறது. அண்மையில், இந்திய உணவுக் கழகத்தின் கூடுதல் கையிருப்புகளையும், சோளத்தையும் பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்க ஒரு மாற்றுச் சந்தை உருவாகியுள்ளது.


உயிரி டீசல்


கடந்த, 2018ம் ஆண்டு வெளியான தேசிய உயிரி டீசல் கொள்கையில், 2030ம் ஆண்டுக்குள் டீசலில், 5 சதவீதம் உயிரி டீசல் கலக்க வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்து வேளாண்மை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, தரிசு நிலங்களில் இவற்றை பயிரிட ஊக்கம் கொடுக்கப்படுகிறது. எண்ணெய் நிறுவனங்கள், 2015 - -16ல், 1.19 கோடி லிட்டராக இருந்த உயிரி டீசல் கொள்முதலை, கடந்த ஆண்டு நிலவரப்படி, 10.55 கோடி லிட்டராக அதிகரித்துள்ளன. இதுவும் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க காரணமாகி இருக்கிறது.


உயிரி எரிவாயு


கடந்த, 2018ல் துவங்கப்பட்ட, நீடித்த நிலைத்த மலிவான மாற்றுப் போக்குவரத்து திட்டம், நாட்டின் உயிரி கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க, உரிய சூழ்நிலையை கொண்டுவர முயல்கிறது. அதன்படி, 2023க்குள் மொத்தம், 1.50 கோடி டன் உற்பத்தி திறன் கொண்ட, 5,000 உயிரி எரிவாயு உற்பத்தி நிலையங்களை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதில், 75 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான வாய்ப்பும் உள்ளது. ஹரியானா, பஞ்சாப், உ.பி.,யில் திட்டமிடப்பட்டுள்ள ஆலைகள் வைக்கோல் கழிவை பயன்படுத்தும். இதன் மூலம், அவற்றை எரிப்பதால் டில்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று கடுமையாக மாசடையும் சூழல் தவிர்க்கப்படும். மேலும், கழிவு மேலாண்மையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த ஆலைகளில் உபரி பொருளாக கிடைக்கும் உயிரி உரம் விவசாயத்திற்குப் பயன்படும்.


latest tamil news
1 லட்சம் கோடி ரூபாய்


இவ்வாறு ஏற்படுத்தப்படும் உயிரி எரிபொருள் கட்டமைப்பு, சமூகங்களுக்கு சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சுகாதார பலன்களை தரும். விரைவில், எண்ணெய் நிறுவனங்கள் வாங்கும் உயிரி எரிபொருட்களின் மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாயை எட்ட உள்ளது. இந்த பணத்தில் பெரும்பங்கு, விவசாயிகளை தான் சென்றடையும். அது, கிராம பொருளாதாரத்தை வளரச் செய்யும். இவ்வாறு, என் அமைச்சகத்தின் செயல்பாடு, பிற நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இருந்து, கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கும் விதமாக மாறியுள்ளது.

தர்மேந்திர பிரதான்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர்
மத்திய அரசு

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kudiyanavan - coimbatore ,இந்தியா
05-ஜன-202114:06:55 IST Report Abuse
kudiyanavan அருமை . எப்பவும் எதிர்கால தேவைகளை மனதில் கொண்டு செயல்படும் மோடி அரசு
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
05-ஜன-202113:46:14 IST Report Abuse
A NATARAJAN எத்தனால் கம்பெனி எல்லாம் மூட பட்டு வருகிறது. இந்த விலை மலிவான வைக்கோல், கரும்பு சக்கை கூட ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள அரசியல்வாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ளன. அந்த அரசியல்வாதி சொல்வதுதான் விலை. விவசாயீ இன்னும் நேரடியாக பயன்பெறமாட்டான். பயன்பெறப்போவதில்லை. மாநில, தேசிய அரசுகள் நேரடி கட்டுப்பாட்டில் ஏன் இன்னும் கொண்டுவரப்படவில்லை. விவசாயத்துறை அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். இதுவும் ஒரு கார்பொரேட் மாபியா தான் . எதோ ஊற ஏமாத்த , கிராமம், கிராமம் என்று பல்லவி பாடுகிறீர்கள்.
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
05-ஜன-202113:39:05 IST Report Abuse
siriyaar கூடவே பேட்டரி வண்டிகளையும் வரவைக்க வேண்டும் ரிலையன்ஸை பேட்டரி தயாரிக்கும் தொழிலுக்கு மாத்திடலாம் கவலைப்படாமல் செய்யுங்கோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X