கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாசில்தார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஒருநாள் அவகாசம் கேட்டதால் கைவிடப்பட்டது

Added : ஜன 05, 2021
Share
Advertisement
பெரியகுளம் : வழக்கு விசாரணைக்கு பட்டா ஆவணங்களை சமர்பிக்க தவறிய தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பில் கைது செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் ஒருநாள் அவகாசம் கேட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் அதே பகுதி முனியாண்டி (எ) மதன் என்பவரது வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு

பெரியகுளம் : வழக்கு விசாரணைக்கு பட்டா ஆவணங்களை சமர்பிக்க தவறிய தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பில் கைது செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர் ஒருநாள் அவகாசம் கேட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் அதே பகுதி முனியாண்டி (எ) மதன் என்பவரது வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு சொந்தமானது என பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணைக்காக பட்டா ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தாசில்தார் ரத்னமாலாவிற்கு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இரு ஆண்டுகளாக ஆவணங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். நீதிமன்ற அமீனா ரமேஷ், வழக்கறிஞர் காமராஜ், நேற்று தாலுகா அலுவலகத்தில் ரத்னமாலாவிடம் கைது நடவடிக்கை உத்தரவை கொடுத்தனர். ஜன. 5ல் (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைப்பதாக ரத்னமாலா தெரிவித்ததால் கைது நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X