பெரியகுளம் : வழக்கு விசாரணைக்கு பட்டா ஆவணங்களை சமர்பிக்க தவறிய தேனி மாவட்டம் பெரியகுளம் தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பில் கைது செய்ய சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் ஒருநாள் அவகாசம் கேட்டதால் நடவடிக்கை கைவிடப்பட்டது.பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்தவர் சக்திவடிவேல். இவர் அதே பகுதி முனியாண்டி (எ) மதன் என்பவரது வீட்டுடன் கூடிய காலிமனை தனக்கு சொந்தமானது என பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணைக்காக பட்டா ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தாசில்தார் ரத்னமாலாவிற்கு சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இரு ஆண்டுகளாக ஆவணங்களை அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தாசில்தார் ரத்னமாலாவை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்ய நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். நீதிமன்ற அமீனா ரமேஷ், வழக்கறிஞர் காமராஜ், நேற்று தாலுகா அலுவலகத்தில் ரத்னமாலாவிடம் கைது நடவடிக்கை உத்தரவை கொடுத்தனர். ஜன. 5ல் (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராகி ஆவணங்களை ஒப்படைப்பதாக ரத்னமாலா தெரிவித்ததால் கைது நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE