மத்திய பிரதேசத்தில், கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகள், அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. நான் இப்போதைக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள போவதில்லை. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கிய பிறகே, நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
- சிவ்ராஜ் சிங் சவுகான், ம.பி., முதல்வர், பா.ஜ.,
கிரிமினல் குற்றமா?
மேற்கு வங்கத்துக்கு, ஒரு மத்திய அமைச்சர் வருவது, அவ்வளவு பெரிய கிரிமினல் குற்றமா? மத்திய அமைச்சரையே வெளியாள் என, மாநில முதல்வர் மம்தா கூறுகிறார். அப்படியானால், எங்கிருந்து வருபவரை, உள்ளூரைச் சேர்ந்தவர் என, அவர் ஏற்றுக் கொள்வார் என புரியவில்லை.
- அனுராக் தாக்கூர், மத்திய நிதித்துறை இணை அமைச்சர், பா.ஜ.,
நீதி கிடைக்க வேண்டும்!
மத்திய அரசுக்கும், விவசாய சகோதரர்களுக்கும் இடையே நடக்கும், ஏழாம் கட்ட பேச்சில், விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என, கடவுளை பிரார்த்திக்கிறேன். இந்த பேச்சு சுமுகமாக முடிந்து, அனைத்து விவசாயிகளும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
- தர்மேந்திரா , முன்னாள் எம்.பி., -- பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE