பொது செய்தி

இந்தியா

'கொரோனா தடுப்பூசி மருந்து போதிய கையிருப்பு உள்ளது'

Added : ஜன 05, 2021
Share
Advertisement
புதுடில்லி : சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினருக்கு அளிக்க, போதிய அளவில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலையின், 'கோவிஷீல்டு' மற்றும் ஐதராபாதில் உள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற, இரு கொரோனா தடுப்பூசி

புதுடில்லி : சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் உள்ளிட்ட முன்னுரிமை பிரிவினருக்கு அளிக்க, போதிய அளவில் கொரோனா தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலையின், 'கோவிஷீல்டு' மற்றும் ஐதராபாதில் உள்ள, பாரத் பயோடெக் நிறுவனத்தின், 'கோவாக்சின்' என்ற, இரு கொரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு, அவசர பயன்பாட்டின் கீழ் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இது குறித்து, 'நிடி ஆயோக்' உறுப்பினரும், கொரோனா தடுப்பூசி நிர்வாக வல்லுனர் குழு தலைவருமான, வி.கே.பால் கூறியதாவது: முதற்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்கள், முன்கள ஊழியர்கள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில், கொரோனா தடுப்பூசி போடப்படும்.

அதற்கு தேவையான தடுப்பூசி மருந்து, போதிய அளவிற்கு இருப்பு உள்ளது. அடுத்த முன்று அல்லது நான்கு மாதங்களில், மேலும் சில நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. அதனால், அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்படும். முதியவர்களுக்கு தடுப்பூசி போடுவதில், இந்தியாவுக்கு அனுபவம் இல்லை என்பதை ஏற்க முடியாது. ஏற்கனவே, தடுப்பூசி திட்டங்கள் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன. குறுகிய காலத்தில், பொதுத் தேர்தலை நடத்திய அனுபவமும், இந்தியாவிற்கு உள்ளது.

எனினும், கொரோனா தடுப்பூசி மருந்தின் சீரான வினியோகம், நிர்வாக ரீதியில் மக்களை குறிப்பிட்ட நாட்களில் வரவழைத்து, தடுப்பூசி போடுவது போன்றவை தான், பெரிய சவால்களாக இருக்கும். அவற்றை சமாளிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடுப்பூசி மூலமாகவோ அல்லது தொற்று பாதிப்பில் இருந்து இயற்கையாக மீண்டவர்கள் வாயிலாகவோ, 70 சதவீத மக்களிடையே நோய் எதிர்ப்பு திறன் உருவாக்கப்பட வேண்டும். அதுவரை, தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடக்கும்.

இதன் வாயிலாக, பள்ளிகள், தொழிற்சாலைகள், நீதித் துறை, பார்லிமென்ட் ஆகியவற்றின் செயல்பாடுகளில் இயல்பு நிலை திரும்பும். தற்போது, கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாது. எனினும், தடுப்பூசி மூலம், சமூக வாழ்க்கை, பொருளாதார நடவடிக்கை ஆகியவற்றின் செயல்பாடுகளை சீராக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.விமான சேவைக்கு ஒப்பந்தம்கொரோனா தடுப்பூசி மருந்தை, அதற்குரிய தட்பவெப்ப நிலையில் பராமரித்து, விமானம் மூலம் அனுப்புவது தொடர்பாக, ஜி.எம்.ஆர்., ஐதராபாத் சர்வதேச விமான நிறுவனத்திற்கும், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த, துபாய் விமான நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும், கொரோனா தடுப்பூசி மருந்துகளை வினியோகிக்க, பிரத்யேக விமான சேவை மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள், இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X