சீன அரசை கடுமையாக விமர்சித்த தொழிலதிபர் ஜாக் மா மாயம்

Added : ஜன 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பீஜிங் : சீன அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட, 'அலிபாபா' நிறுவனர் ஜாக் மா, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காததால், அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா, சாதாரண ஆசிரியராக இருந்து, வலைதளத்தில் பொருட்களை விற்கும், அலிபாபா நிறுவனம் மூலம், அந்த நாட்டின், 'நம்பர் ஒன்' பணக்காரராக
 சீன அரசை கடுமையாக விமர்சித்த தொழிலதிபர்  ஜாக் மா மாயம்

பீஜிங் : சீன அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட, 'அலிபாபா' நிறுவனர் ஜாக் மா, இரண்டு மாதங்களுக்கு மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காததால், அவர் எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது.

நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த ஜாக் மா, சாதாரண ஆசிரியராக இருந்து, வலைதளத்தில் பொருட்களை விற்கும், அலிபாபா நிறுவனம் மூலம், அந்த நாட்டின், 'நம்பர் ஒன்' பணக்காரராக உயர்ந்தவர். பனிப் போர்இந்நிலையில், சீன அரசின் கீழ் உள்ள, வங்கி மற்றும் நிதித் துறை கட்டுப்பாடு அமைப்புகளின் பிற்போக்கான செயல்பாடுகள் குறித்து, கடந்த ஆண்டு பகிரங்கமாக விமர்சித்தார். இதனால் இவருக்கும், சீன அதிபர் ஷீ ஜிங்பிங்கிற்கும் இடையே பனிப் போர் துவங்கியது. இந்நிலையில், ஜாக் மாவின், 'ஆன்ட்' நிறுவனம், கடந்த ஆண்டு நவ., துவக்கத்தில், புதிய பங்கு வெளியீடு மூலம், 2.62 லட்சம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டது.

பங்கு வெளியீட்டிற்கு இரு தினங்களுக்கு முன், அதை, சீன அரசு தடை செய்தது. இதன் எதிரொலியாக, அலிபாபா குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு வெகுவாக சரிந்தன. ஜாக் மா சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ந்தது. இந்நிலையில், அலிபாபா நிறுவனம் சட்ட மீறலில் ஈடுபட்டதாக கூறி, ஜாக் மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவரது குழுமத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பாக, ஜாக் மாவிடம், சீன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, ஜாக் மா, சீனாவை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.

அதன் பின், கடந்த இரண்டு மாதங்களாக, ஜாக் மா, பொது நிகழ்ச்சிகள் எதிலும் தலைகாட்டவில்லை. அவரது அறக்கட்டளை சார்பில், 'ஆப்ரிக்காவின் வணிக நாயகர்கள்' என்ற, இளம் தொழில்முனைவோரின் திறமையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மர்மமாக உள்ளதுஇதில் இந்தாண்டு, ஆப்ரிக்காவைச் சேர்ந்த, 10 தொழில் முனைவோர்கள், இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தனர்.கடந்த ஆண்டு, நவ., 14ல் இறுதிப் போட்டி நடந்தது. இதில் நடுவராக ஜாக் மா பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு, 1,100 கோடி ரூபாய் ஊக்கப் பரிசு வழங்குவார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சியில் ஜாக் மா பங்கேற்கவில்லை. அதற்கு, 'ஜாக் மாவின் நிகழ்ச்சி நிரல் ஒத்துவரவில்லை' என, அலிபாபா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது.

அந்நிகழ்ச்சிக்கான வலைதளத்தில் இடம் பெற்றிருந்த ஜாக் மாவின் படங்களும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், கடந்த இரண்டு மாதங்களாக, ஜாக் மா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவரை, சீன அரசு சிறை வைத்திருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஷீ ஜிங்பிங், சகிப்புத்தன்மையின்றி, சர்வாதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக, அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
05-ஜன-202111:02:27 IST Report Abuse
S.Baliah Seer எந்த ஒரு கம்யூனிஸ்ட் நாட்டிலும் பெரும் பணக்காரர்கள் தோன்ற முடியாது. சீனாவின் ஜாக் மா ஆசியாவிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர். இதிலிருந்து சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு இல்லை என்பது தெளிவாகிறது. சீனா காம்யுனிஸ்ட் போர்வையில் இயங்கும் ஒரு முதலாளித்துவ நாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X