பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு ரூ.2,500 கிடைச்சாச்சு!

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:தமிழக அரசு அறிவித்தபடி, 2,500 ரூபாய் ரொக்கப்பரிசுடன், பொங்கல் பரிசு பொருள் வினியோகம் துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 666 ரேஷன் கார்டுகளுக்கு, 199.65 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.திருப்பூர் பல்லடம் ரோடு, மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த விழாவில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பரிசு

திருப்பூர்:தமிழக அரசு அறிவித்தபடி, 2,500 ரூபாய் ரொக்கப்பரிசுடன், பொங்கல் பரிசு பொருள் வினியோகம் துவங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், ஏழு லட்சத்து, 48 ஆயிரத்து, 666 ரேஷன் கார்டுகளுக்கு, 199.65 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.திருப்பூர் பல்லடம் ரோடு, மாவட்ட வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடந்த விழாவில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், பரிசு பொருள் வினியோகத்தை துவக்கி வைத்தார்.ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, 2,500 ரூபாய் ரொக்கம், தலா, 20 கிராம் முந்திரி மற்றும் திராட்சை, ஐந்து கிராம் ஏலக்காய் ஆகியவை, துணிப்பையில் வைத்து வழங்கப்பட்டது. சில இடங்களில், இலவச வேட்டி, சேலையும் சேர்த்து வழங்கப்பட்டது.எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், விஜயகுமார், ஆர்.டி.ஓ., ஜெகநாதன், 'வளர்மதி' கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.வெள்ளகோவிலில்...வெள்ளகோவில் ஒன்றிய, நகர பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கி துவக்கி வைத்தார்.ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் டீலக்ஸ் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பகுதியில் நடந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், யூனியன் சேர்மன் வெங்கடேச சுதர்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அவிநாசியில்...அவிநாசியில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி பல இடங்களில் நடந்தது.கருணைபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு என்.சி. எம்.எஸ். தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சங்க தலைவர் (பொ) மணி, கட்சி நிர்வாகிகள் ரமேஷ், தம்பி ராஜேந்திரன், சுப்பிரமணியன், வடிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X