திருப்பூர், ஹார்வி ரோட்டில், போக்குவரத்தை தடை செய்யும் வகையில் சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. பிற வாகன ஓட்டிகள் பாதிக்கின்றனர்.- எல்.சரவணக்குமார், ஹார்விரோடு.தண்ணீர்... தண்ணீர்திருப்பூர் மாநகராட்சி, 36வது வார்டு, கோவில்வழி பதிகளில், 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பாதிக்கின்றனர்.- எம்.பாலாஜி, கோவில்வழி.வெளிச்சம் மாயம்கூலிபாளையம் நால்ரோடு, ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்த தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது.- ஆர்.ரங்கசாமி, கூலிபாளையம்.கொசு ரணகளம்போயம்பாளையம், பழனிசாமி நகர், 4வது வீதியில், கழிவுநீர் கால்வாயில் மண் சரிந்து விழுந்துள்ளது. கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தியாகிறது.- கே.பொன்னுசாமி, போயம்பாளையம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE