அவிநாசி:மத்திய அரசின், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், வீடுகள் தோறும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.இத்திட்டத்தில், ஒரு சொட்டு தண்ணீர் கூட, வீணாக கூடாது என்ற கருத்து, வலியுறுத்தப்படுகிறது.அந்த அடிப்படையில், வீடுகள் மற்றும் குடிநீர் தொட்டிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், வீணாவதை தவிர்க்க, அந்தந்த வீடுகள் மற்றும் தொட்டிகள் உள்ள இடத்திலேயே, உறிஞ்சுக்குழாய் அமைத்து, அவற்றை நிலத்தடியில் செலுத்தும் வகையில், திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, அரசு அறிவுறுத்தியுள்ளது.முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும், குறைந்தளவு வீடுகள் கொண்ட கிராமங்களில், மாதிரி திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.உறிஞ்சுக்குழி அமைக்க, 9,500 ரூபாய் மானியமும் வழங்கப்பட உள்ளது. வீடுகளில் இருந்து வீணாகும் கழிவுநீர்மற்றும் பயன்படுத்தப்பட்ட தண்ணீரை, உறிஞ்சுக்குழி அமைத்து நிலத்தடியில் செலுத்துவதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயரும். மண் வளம் பாதுகாக்கப்படும்,' என அடியார்கள் கூறி வருகின்றனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில், முதற்கட்டமாக, நடுவச்சேரி, சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், புலிப்பார், தெக்கலுார், பழங்கரை மற்றும் சேவூர் ஆகிய ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE