பல்லடம்:கடந்த, 2018 - -19ம் நிதி ஆண்டில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிகளில் கால்நடைகளுக்கு தேவையான குடிநீரை அவ்வப்போது நிரப்ப வேண்டியது ஊராட்சிகளின் கடமை. மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்திசெய்யும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 20 ஊராட்சிகளிலும் கால்நடை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன. தொட்டி அமைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில், அவ்வப்போது குடிநீர் நிரப்பப்பட்டு வந்த சூழலில், காலப்போக்கில் குடிநீர் தொட்டி காட்சி பொருளாக மாறி வருகிறது.ஒரு சில ஊராட்சிகள் மட்டுமே இதைமுறையாக பின்பற்றி வருகின்றன. பெரும்பாலான கிராமங்களில் குடிநீர் தொட்டிகள் காய்ந்து கிடக்கின்றன. மண் மற்றும் குப்பைகள் நிறைந்துள்ளன.அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, பயனளிக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்படும் இது போன்ற திட்டங்கள் நாளடைவில் கிடப்பில் போடப்படுகின்றன.மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதுடன், திட்டங்களின் பயன் முறையாக மக்களுக்கு சென்று சேர்வதில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE