பொது செய்தி

தமிழ்நாடு

'வங்கி கடனில் பாரபட்சம் கூடாது'

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன், மாநகராட்சி கமிஷனரிடம் அளித்துள்ள மனு:சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்வநிதி திட்டத்தில், கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், சாலையோர வியாபாரி, வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன.ஆனால், வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தால்,

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பாலன், மாநகராட்சி கமிஷனரிடம் அளித்துள்ள மனு:சாலையோர வியாபாரிகளுக்கு ஸ்வநிதி திட்டத்தில், கடன் வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும், சாலையோர வியாபாரி, வங்கியில் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளன.ஆனால், வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், மாதக்கணக்கில் கடன் வழங்காமல், இழுத்தடிக்கின்றனர். சிலருக்கு மட்டும் உடனடியாக கடன் வழங்கப்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் மூலம், அடையாள அட்டை பெற்றவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுகிறது; இதனால், அடையாள அட்டை இல்லாத, வியபாரிகள், கடன் பெறமுடியாமல் தவிக்கின்றனர்.தகுதியான அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும், பாரபட்சமின்றி வங்கிகள் கடன் வழங்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X