பொது செய்தி

தமிழ்நாடு

அக்கறை இல்லாத அதிகாரிகள்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்:அவிநாசி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில், அவிநாசி -- அத்திக்கடவு திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4 வது குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்காக குழாய் பதிப்பு பணிகள் நடந்து வருகிறது.இப்பணி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகள், ஊரக ரோடுகள் உள்ளிட்ட ரோடுகளின் அருகே மேற்கொள்ளப்படுகிறது.ஒரு சில பகுதிகளில் கேபிள் பதிப்பு பணிகள் நடந்து வருகிறது. இது

திருப்பூர்:அவிநாசி பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதியில், அவிநாசி -- அத்திக்கடவு திட்டம், திருப்பூர் மாநகராட்சிக்கு 4 வது குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்காக குழாய் பதிப்பு பணிகள் நடந்து வருகிறது.இப்பணி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகள், ஊரக ரோடுகள் உள்ளிட்ட ரோடுகளின் அருகே மேற்கொள்ளப்படுகிறது.ஒரு சில பகுதிகளில் கேபிள் பதிப்பு பணிகள் நடந்து வருகிறது. இது போன்ற பணிகளுக்கு தோண்டப்படும் குழிகள் முறையாக மூடப்படுவதில்லை.இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.ரோட்டை ஒட்டி அமைக்கப்படும் மின் கம்பங்கள் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. அவிநாசி பேரூராட்சி பகுதியில் தாலுகா அலுவலகம், வள்ளுவர் வீதி, சேவூர் ரோடு, மடத்துப்பாளையம் ரோடு பகுதிகளில் ரோட்டின் மையத்தில் மின் கம்பங்கள் உள்ளது.இது போன்ற பிரச்னைகளால் தினமும் பல்வேறு இன்னல்களை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சந்திக்கின்றனர்.உள்ளூர் அதிகாரிகள் இப்பிரச்னை குறித்து அக்கறை செலுத்துவதில்லை. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவிநாசி பகுதி அனைத்து கட்சி நிர்வாகிகள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X