பல்லடம்:பல்லடம் வட்டாரத்தில், 'தொழில் வளர்ச்சி ஒருபுறம் அதிகரித்து வர, சுகாதார சீர்கேடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் கோழி இறைச்சி, மீன், முட்டை கழிவுகள் கொட்டப்படுகின்றன.நோய்வாய்ப்பட்ட, இறந்த கோழிகள் மற்றும் கெட்டுப்போன முட்டைகள், இறைச்சி மீன் கழிவுகள் உள்ளிட்டவை மூட்டைகளில் கட்டி ரோட்டோரங்களிலும், பி.ஏ.பி., வாய்க்கால், மற்றும் குளம் குட்டைகளிலும் வீசப்படுகின்றன.இவ்வாறு வீசப்படும் கழிவுகளை, நாய், பறவைகள் உள்ளிட்டவை உண்பதால் அவற்றுக்கும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. மனிதர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு, கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை தேவை.வெள்ளகோவில்வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே தாராபுரம் சாலையையும், செம்மாண்டம் பாளையம் மற்றும் மூலனுார் சாலையையும் இணைக்கும் பிரதான சாலையில் வீடுகள், போக்குவரத்து அதிகம் உள்ள நத்தமேடு, ராஜீவ் நகர் பகுதியில் கோழி கழிவுகளை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசி செல்கின்றனர். மூட்டை உடைந்தும், வாகனங்களின் சக்கரங்களில் சிக்கியும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. கழிவு மூட்டைகளை நாய்கள் ரோட்டிற்கு இழுத்து வருகின்றன.ஏற்கனவே மூலனுார் சாலை, வள்ளியரச்சல் சாலை போன்ற பகுதிகளில் கோழி கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று சாலையோரத்தில் கொட்டி வந்தனர். தற்போது ராஜீவ் நகர் பகுதியில் வீடுகள் அதிகமாகவும் போக்குவரத்து அதிகமாகவும் உள்ள சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இது, மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பு பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை தேவை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE