ஊட்டி:நீலகிரியில், அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கார்டுதாரர்களுக்கு, நேற்று முதல் வினியோகிக்கப்பட்டது.நீலகிரியில், 6 தாலுகாவில், 402 ரேஷன் கடைகள் உள்ளன. 2 லட்சத்து, 17 ஆயிரத்து 794 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 2 லட்சத்து 15 ஆயிரத்து 601 உள்ளது. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுநீளகரும்பு, வேஷ்டி, சேலை மற்றும் 2, 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. ஊட்டியில், மார்க்கெட் எதிரே உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் நடந்த துவக்க நிகழ்ச்சியில், கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசுகையில்,''பொங்கல் பரிசு தொகுப்புக்காக, அரசு, 56 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. வரும், 13ம் தேதி வரை சுழற்சி முறையில், நாள் ஒன்றுக்கு, 200 குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படுகிறது. முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. குறிபிட்ட நாளில் வாங்காமல் விடுபட்டவர்கள், மாதம் இறுதி வரை வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.அதிகாரிகள் கூறுகையில், 'இதில் சிறப்பு அம்சமாக, கூடலுாரில், பழங்குடி பெண்கள் சமூக இடைவெளியுடன், ரேசன் கடைகளில் வரிசையில் நின்று, பொங்கல் பரிசை வாங்கி சென்றனர்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE