பொள்ளாச்சி:நெகமம் பஸ் ஸ்டாண்ட்டுக்குள், கடந்த, 21 ஆண்டுகளாக இருக்கை வசதி ஏற்படுத்தாததால், பயணிகள் தரையில் அமரும் அவலம் தொடர்கிறது.பொள்ளாச்சி, நெகமத்தில், 21 ஆண்டுகளுக்கு முன், பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் செல்லும் பஸ்கள், பஸ் ஸ்டாண்டுக்கும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால், பொள்ளாச்சி, கோவை, உடுமலை, காங்கேயம், திருப்பூர், பல்லடம், திருச்சி பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், நெகமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்களும், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து சென்றன. சேலை வியாபாரிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும்மாணவர்கள் பயனடைகின்றனர்.இருப்பினும், இதுவரை பஸ் ஸ்டாண்டுக்குள், பயணிகள் உட்கார, இருக்கை வசதி இல்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும், இருக்கை அமைக்கும் பணியும், குடிநீர் இணைப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவித்து, சில மாதங்களாகியும், இதுவரை, இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பயணிகள் தரையில் அமர்ந்து காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது.பஸ் ஸ்டாண்ட் துவங்கி, 21 ஆண்டுகளாகியும் பயணிகள் இருக்கை, குடிநீர் வசதி ஏற்படுத்தாததால், அதிருப்தி நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE