கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அடுத்துள்ள சேரிபாளையத்தில் பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் இடிக்கப்படாமல் உள்ளதால், அச்சுறுத்தும் பகுதியாக மாறிவருகிறது.சேரிபாளையத்தில், குருவேகவுண்டன்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வந்தது.இந்த கட்டடம் பழுதடைந்ததால், பலநோக்கு மைய கட்டடம் கட்டப்பட்டு, அங்கு ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது.கடந்த ஒரு ஆண்டாக பழுதடைந்த ரேஷன் கடை கட்டடம் இடிக்கப்படவில்லை. கட்டடத்தின் சுவர் முழுவதும் விளம்பர நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் 'குடி'மகன்கள் மது அருந்தும் இடமாக பயன்படுத்துவதால், இந்த வழியாக நடந்து செல்வதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர்.மேலும், கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை தடுக்க, பழுதடைந்த ரேஷன் கடை கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE