கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரம் எதிரேயுள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து, ஆர்.எஸ்., ரோடு பிரிந்து செல்கிறது. மூன்று ரோடு சந்திப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு வசதியாக, ரோட்டின் வடக்கு பகுதியில் இருந்து, மூன்று டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் திரும்பும் போது,ஆட்டோ ஸ்டாண்ட்டுக்கு எவ்வித சிரமம் ஏற்படுவதில்லை.ஆனால், இந்த ரோட்டில் இருந்து வாகனங்களும், சர்வீஸ் ரோட்டில் இருந்து வாகனங்களும் ஒன்றுக்கொன்று எதிராக வரும் போது, சர்வீஸ் ரோட்டிலும், ஆர்.எஸ்., ரோட்டிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.மேலும், சர்வீஸ் ரோட்டில் 'யு-டேர்ன்' அமைக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் திரும்பி வந்து, மீண்டும் ஆர்.எஸ்., ரோட்டில் திரும்பும்போது, டிவைடரால் போக்குவரத்து நெரிசல்ஏற்படுகிறது.தற்போது, பஸ் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், சர்வீஸ் ரோட்டில் பயணிகளை இறக்கி விட ஆர்.எஸ்., ரோடு பிரிவில் பஸ்கள் நின்று செல்கின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சரிசெய்ய, ஆர்.எஸ்., ரோட்டில் வைக்கப்பட்டுள்ள மூன்று டிவைடர்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 'தினமலர்' நாளிதழிலில் செய்தி வெளியிடப்பட்டது.செய்தி எதிரொலியாக, டிவைடர்கள் அகற்றப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளதால், பொதுமக்கள், வாகனஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE