பொது செய்தி

தமிழ்நாடு

147 நாட்களாக 100 அடியில் ஆழியாறு! நீர் நிரம்பி ததும்புவதால் மகிழ்ச்சி

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆழியாறு அணை நீர்மட்டம், 100 அடிக்கு குறையாமல், கடந்த, 147 நாட்களாக ததும்புகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் முக்கிய அணையாக உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள, 6,400 ஏக்கர் நிலங்களும்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி
 147 நாட்களாக 100 அடியில் ஆழியாறு! நீர் நிரம்பி ததும்புவதால் மகிழ்ச்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆழியாறு அணை நீர்மட்டம், 100 அடிக்கு குறையாமல், கடந்த, 147 நாட்களாக ததும்புகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை, பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் முக்கிய அணையாக உள்ளது. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள, 6,400 ஏக்கர் நிலங்களும்; புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. கேரள நீர் பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கும் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.கடந்த சில மாதங்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் மழை பெய்ததால், அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.

கடந்தாண்டு ஆக.,10ம் தேதி அணை நீர்மட்டம், 100 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து இருந்ததால், நீர்மட்டம், 119 அடி வரை உயர்ந்தது. அதன் பின், அணை நீர்மட்டம் குறையாமல் இருந்தது.அணையில் இருந்து பாசன தேவை மற்றும் கேரளாவுக்கு ஒப்பந்தப்படி தண்ணீர் திறக்கப்பட்டதுடன், உபரி நீரும் வீணகாமல் குளம், குட்டைகள் நிரப்பப்பட்டன. கடந்த, 147 நாட்களாக அணை நீர்மட்டம், 100 அடிக்கு குறையாமல் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி, ஆழியாறு அணை நீர்மட்டம், 107.80 அடியாக இருந்தது. வினாடிக்கு, 475 கனஅடி நீர் வரத்தாகவும்; வினாடிக்கு, 552 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம், 100 அடிக்கு குறையாமல் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தாண்டு கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் சமாளிக்க முடியும், என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X