பொள்ளாச்சி, உடுமலையில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு, பொங்கல் பரிசு; மற்றும் தொகுப்பு வழங்கப்படுகிறது.தமிழக அரசு பொங்கல் பரிசாக, 2,500 ரூபாய் பணம்; தொகுப்பாக, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை; தலா 20 கிராம் முந்திரி, திராட்சை; ஐந்து கிராம் ஏலக்காய், ஒரு கரும்பு ஆகியவை மக்களுக்கு வழங்க உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், பொள்ளாச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வடுகபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார். சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல், குடிமைபொருள் தனி தாசில்தார் விஜயகுமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.குடிமைப்பொருள் அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி தொகுதியில், 103 கடைகள்; உடுமலை தொகுதியில், 65 கடைகள், என, தாலுகாவுக்கு உட்பட்ட, 168 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம், 90 ஆயிரத்து, 355 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 2,500 ரூபாய் வீதம் மொத்தம், 22 கோடியே, 58 லட்சத்து, 87ஆயிரத்து, 500 ரூபாய் வழங்கப்படுகிறது.தினமும், காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை பொங்கல் தொகுப்பு வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நாளுக்கு, 200 'டோக்கன்' வீதம் வினியோகிக்கப்படும். இவ்வாறு, தெரிவித்தனர்.ஆனைமலைஆனைமலை தாலுகாவில், 60,123 கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுப்பொருட்கள் பெற தகுதியானவர்கள். ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில், வீதி வாரியாக சென்று, மக்களுக்கு 'டோக்கன்' வழங்குகின்றனர். கொரோனா பரவலை தடுக்க, ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படுகிறது.வரும், 13ம் தேதி வரை பொங்கல் பரிசுப்பொருட்கள் பெறலாம். 'டோக்கன்' பெறாதவர்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெற்றுக்கொள்ளலாம், என, ஆனைமலை தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி முருகராஜ் தெரிவித்தார்.வால்பாறைவால்பாறை தாலுகாவில், 48 ரேஷன் கடைகளில், 17,214 கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான துவக்க விழா தாசில்தார் ராஜா தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., கஸ்துாரி பொங்கல் தொகுப்பு வழங்கி பேசினார். கூட்டுறவு நகர வங்கி தலைவர் அமீது, துணைத்தலைவர் மயில்கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.உடுமலைஉடுமலை தாலுகாவில், ஒரு லட்சத்து, 5 ஆயிரத்து, 189 ரேஷன் கார்டுதாரர்களுக்கும், மடத்துக்குளம் தாலுகாவில், 36,357 பேர், என, 1.41 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.உடுமலை தாலுகாவில், 183 ரேஷன் கடைகளிலும், மடத்துக்குளம் தாலுகாவில், 65 ரேஷன் கடைகளிலும், 'டோக்கன்' அடிப்படையில், வரிசையில் காத்திருந்து பொங்கல் தொகுப்புகளை பெற்றுச்சென்றனர். அமைச்சர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆகியோர், பெரியகோட்டை ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஒன்றிய பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் திட்டத்தை துவக்கி வைத்தனர்- நிருபர் குழு -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE