அன்னுார் தாலுகாவில், 28 ஊராட்சி, மூன்று பேரூராட்சிகளில், 54 ஆயிரத்து, 540 அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, தலா, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், முழுநீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோக துவக்க விழா, நேற்று கஞ்சப்பள்ளியில் நடந்தது.ஊராட்சி தலைவர் சித்ரா சுப்ரமணியம் வரவேற்றார். சபாநாயகர் தனபால், பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிசாமி, ஊராட்சி துணைத் தலைவர் வசந்த், கூட்டுறவு சங்க தலைவர் திருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னுார் கூட்டுறவு பண்டகசாலையில் நடந்த விழாவில், அ.தி.மு.க., நகர செயலாளர் சவுகத் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிள்ளையப்பம்பாளையத்தில், கூட்டுறவு சங்க தலைவர் சாய் செந்தில் தலைமையில் வினியோகம் துவங்கியது. ஊராட்சித் தலைவர் லட்சுமண மூர்த்தி, கூட்டுறவு சங்க துணை தலைவர் சுப்ரமணி, மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நேற்று காலை 8:00 மணிக்கே, முதியோர், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் ரொக்க தொகை மதியம் 12:30 மணிக்கு தான் வந்தது. மக்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு பணத்தை பெற்று சென்றனர்.கடைகளில், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு, தனித்தனி வரிசை அமைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் தனி வரிசை இல்லாததால் முதியோரும் வரிசையில் நின்று வாங்கினர். பல இடங்களில் பணம் தர தாமதமானதால், வரிசையில் நின்ற பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.* அன்னுார் வடக்கலுார் ஊராட்சியில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அமுல் கந்தசாமி பொங்கல் பரிசு வினியோகத்தை துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ராஜ்குமார், துணைத்தலைவர் சங்கீதா, வார்டு உறுப்பினர் ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அக்கரை செங்கப்பள்ளியில், ஜெ., பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் முன்னிலையில் வினியோகம் துவங்கியது.* பொகலுார் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் நடராஜன், கூட்டுறவு சங்கத் தலைவர் சதீஷ் முன்னிலையில் விநியோகம் துவங்கியது. ஒட்டர்பாளையம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர் சுமதி கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், காட்டம்பட்டி ஊராட்சியில் துணைத் தலைவர் மதியழகன், தொழிற் சங்க ஒன்றிய செயலாளர் சிவகுமார் முன்னிலையில் துவங்கியது.அ.மேட்டுப்பாளையத்தில் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி தலைமையில், விநியோகம் துவங்கியது. 21 ஊராட்சிகளிலும், ரேஷன் கடையில், 200 பேருக்கு மட்டும் விநியோகம் செய்யப்பட்டது.* கோவில்பாளையம் பேரூராட்சியில், அ.தி.மு.க., நகர செயலாளர் தேவராஜ் தலைமையில் வினியோகம் துவங்கியது. கூட்டுறவு சங்க இயக்குனர்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.* மேட்டுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்க தலைவர் வான்மதி சேட் தலைமை வகித்தார். தாசில்தார் சாந்தாமணி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ் ஆகியோர் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்களும், பணம் மற்றும் இலவச வேட்டி, சேலைகளை வழங்கி துவக்கி வைத்தனர்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் விஷ்ணுகுமார், பொது மேலாளர் வெள்ளிங்கிரி, வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், வட்ட வழங்கல் ஆய்வாளர் ஹரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்க துணை தலைவர் அமானுல்லா நன்றி கூறினார்.மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும், 118 ரேஷன் கடைகளில் உள்ள, 81 ஆயிரத்து, 119 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு, 21 கோடியே, 50 லட்சம்.* சூலுார், சுல்தான்பேட்டை வட்டாரத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு துவக்கி வைக்கப்பட்டது.கரவளி மாதப்பூர் ஊராட்சியில் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினார்.சோமனுாரில் நடந்த விழாவில், கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல், பேரூராட்சி முன்னாள் தலைவர் மகாலிங்கம் ஆகியோர், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர். பணியை, எம்.எல்.ஏ., கந்தசாமி அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.* துடியலுார் அருகே குருடம்பாளையம் ஊராட்சியில், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை, அ.தி.மு.க., கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் துவக்கி வைத்தார். ஊராட்சி தலைவர் ரவி, ஒன்றிய துணை தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாணிக்கம், துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். பொங்கல் தொகுப்பு பெற, பொதுமக்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து நின்று, பொருட்கள் பெற்று சென்றனர்.பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் உற்சாகத்துடன் பெற்று சென்றனர்-நிருபர் குழு- .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE