சம்பவம் செய்தி

தமிழ்நாடு

6 பவுன் காயின் திருட்டு: போலீசார் விசாரணை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடையில் நகை கடையின் உரிமையாளரை, கீழே தள்ளிவிட்டு மர்ம நபர், 6 பவுன் தங்க காயின்கள் திருடிச் சென்றுள்ளார்.காரமடை மேற்கு ரத வீதியில், சாந்தாமணி என்பவர் தங்க நகை கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து, தங்க நாணயம் வேண்டும் என கேட்டுள்ளார். கடையின் உரிமையாளர் சாந்தாமணி, ஒவ்வொன்றாக காண்பித்துள்ளார்.

மேட்டுப்பாளையம்:காரமடையில் நகை கடையின் உரிமையாளரை, கீழே தள்ளிவிட்டு மர்ம நபர், 6 பவுன் தங்க காயின்கள் திருடிச் சென்றுள்ளார்.காரமடை மேற்கு ரத வீதியில், சாந்தாமணி என்பவர் தங்க நகை கடை வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கடைக்கு வந்து, தங்க நாணயம் வேண்டும் என கேட்டுள்ளார். கடையின் உரிமையாளர் சாந்தாமணி, ஒவ்வொன்றாக காண்பித்துள்ளார். அப்போது, ஒரு பவுன் தங்க காயினை, வாலிபர் பாக்கெட்டில் போட்டுள்ளார். இதை கண்ட சாந்தாமணி, வெளியே சென்று பக்கத்து கடைக்காரர்களை அழைத்துள்ளார்.அப்போது கடையின் உள்ளே இருந்த வாலிபர் விற்பனைக்கு வைத்திருந்த, 6 ஒரு பவுன் தங்க காயின்களை எடுத்து கொண்டு தப்பினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இக்காட்சிகளை, கடை உரிமையாளர், காரமடை போலீசில் ஒப்படைத்தார்.காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., நாகராஜ் ஆகியோர், தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X