பொது செய்தி

தமிழ்நாடு

வட்டார விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக்கன்று

Added : ஜன 05, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு வாழை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.தோட்டக்கலை துறை சார்பில், திசு வாழை வளர்ப்பை ஊக்குவிக்க, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 3 லட்சத்து, 75 ஆயிரம் வாழைக்கன்றுகள் வழங்க இலக்கு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டார தோட்டக்கலை துறை சார்பில், விவசாயிகளுக்கு வாழை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.தோட்டக்கலை துறை சார்பில், திசு வாழை வளர்ப்பை ஊக்குவிக்க, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு இலவசமாக வாழைக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 3 லட்சத்து, 75 ஆயிரம் வாழைக்கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2,500 கன்றுகள் வழங்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். வாழை கன்றுகள் ஒரு அடி உயரத்துக்கு வளர்க்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள விவசாயிகள், சிட்டா, ஆதார் எண் உட்பட விபரங்களை அளித்து, திசு வாழை வளர்ப்பு திட்டத்தில் இலவசமாக வாழைக் கன்றுகளை பெற்று பயன்பெறலாம் என, பெரியநாயக்கன்பாளையம் தோட்டக்கலை துறையினர் அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X