தமிழ்நாடு

மறுபடியும் மொதல்ல இருந்தா...! காத்திருந்து மனு கொடுத்தும் வீண் என புலம்பல்

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் வந்த சபாநாயகரிடம், 100க்கும் மேற்பட்டோர் மலைபோல் மனுக்களை வழங்கினர். சபாநாயகர் அவற்றை, மீண்டும் அன்னுார் தாலுகா அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அன்னுார் வாரச்சந்தை வளாகத்தில், ஐந்து கோடியே, 50 லட்சம் மதிப்பில் தரை தளம் அமைத்தல், கூரைகளுடன் கடைகள் அமைத்தல், வணிகவளாகம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான
மறுபடியும் மொதல்ல இருந்தா...! காத்திருந்து மனு கொடுத்தும் வீண் என புலம்பல்

அன்னுார்:அன்னுார் வந்த சபாநாயகரிடம், 100க்கும் மேற்பட்டோர் மலைபோல் மனுக்களை வழங்கினர். சபாநாயகர் அவற்றை, மீண்டும் அன்னுார் தாலுகா அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு சென்றது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அன்னுார் வாரச்சந்தை வளாகத்தில், ஐந்து கோடியே, 50 லட்சம் மதிப்பில் தரை தளம் அமைத்தல், கூரைகளுடன் கடைகள் அமைத்தல், வணிகவளாகம் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தனபால் பேசுகையில், ''அன்னுார் பேரூராட்சியில், விரைவில் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் துவங்கும்.
மின்மயானம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. அத்திக்கடவு திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளது,'' என்றார்.இதையடுத்து, 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட, 8 இறைச்சிக்கடை கட்டடங்களை திறந்து வைத்தார். ஊராட்சி ஒன்றியம் சார்பில், 15 பேருக்கு 'அம்மா' ஸ்கூட்டர் மானிய உத்தரவு வழங்கினார்.கரியாம்பாளையம் ஊராட்சி எல்லப்பாளையத்தில் நடந்த விழாவில், சபாநாயகர் தனபாலிடம், 100க்கும் மேற்பட்டோர் ஏராளமான மனுக்களை அளித்தனர்.எல்லப்பாளையம் மற்றும் பிள்ளையப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
பிள்ளையப்பம்பாளையத்தில், 'அம்மா மினி கிளினிக்' அமைக்க வேண்டும். தொட்டியனுாரில், 100க்கும் மேற்பட்டோர், தங்களது நிலத்தை வாங்க, விற்க, அடமானம் வைக்க, கடன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.இத்துடன் முதியோர் உதவித்தொகைக்காக பல ஆண்டுகளாக பலமுறை மனு செய்தும் உத்தரவு கிடைக்கவில்லை என, மாற்றுத்திறனாளிகள் முதியோர் விதவைகள் என, 20க்கும் மேற்பட்டோர் கண்ணீருடன் மனு கொடுத்தனர்.
ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். சிறுதொழில் செய்ய கடன், இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடு, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கழிவுநீர் வடிகால், பஸ் வசதி, தெருவிளக்கு, குளம் துார்வாருதல் என்பன உட்பட கோரிக்கைகளுக்காக கரியாம்பாளையம், எல்லப்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், மனுக்கள் வழங்கினர்.சபாநாயகர் தனபால், வழக்கம்போல் மனுக்களை படித்து பார்க்காமல், பரிந்துரை செய்யாமல், அருகில் நின்றிருந்த, கோவை வடக்கு ஆர்.டி.ஓ., சுரேஷிடம் வழங்கினார். அவர், அந்த மனுக்களை அன்னுார் தாசில்தார் சந்திராவிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே, அன்னுார் தாலுகா அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும், பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தான், சபாநாயகரை பல மணி நேரம் காத்திருந்து, நேரில் மனு கொடுத்தோம்.ஆனால் அந்த மனுக்களை படிக்காமலேயே, அந்த மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் உரிய பரிந்துரை எதுவும் தெரிவிக்காமல், மீண்டும் அதிகாரிகளிடம் கொடுத்தது ஏமாற்றமளிக்கிறது.
ஒவ்வொரு முறை, சபாநாயகர் வரும் போதும், பெறும் மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் விவாதிப்பதில்லை. ஒட்டுமொத்தமாக மனுக்களை, மீண்டும் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்' என, அதிருப்தியுடன் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X