பொது செய்தி

இந்தியா

எல்லையில் பீரங்கி குவிப்பு

Added : ஜன 05, 2021
Share
Advertisement
புதுடில்லி : எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவ நிலைகளுக்கு எதிராக, பீரங்கிகளை நிறுத்தி வைத்து, சீனா விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கிழக்கு லடாக்கின் எல்லையில், இந்திய, சீனப் படைகள், கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பல சுற்று பேச்சு நடத்தியும், அதில் தீர்வு ஏற்படவில்லை.

புதுடில்லி : எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவ நிலைகளுக்கு எதிராக, பீரங்கிகளை நிறுத்தி வைத்து, சீனா விஷமத்தனத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கிழக்கு லடாக்கின் எல்லையில், இந்திய, சீனப் படைகள், கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக பல சுற்று பேச்சு நடத்தியும், அதில் தீர்வு ஏற்படவில்லை. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் எல்லையில், ரேசாங்க் லா, ரேசின் லா, முகோஸ்ரி ஆகிய பகுதியில், இந்திய ராணுவ நிலைகளுக்கு எதிராக, சீனா, தன் பீரங்கிகளை தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதிகளில், 35 பீரங்கிகள் வரை, சீனா நிறுத்தி வைத்துள்ளது.

கடல்மட்டத்திலிருந்து, 17 ஆயிரம் அடி உயரமுள்ள அந்தப் பகுதிகளுக்கு, நம் ராணுவமும், பீரங்கிகளை அனுப்பி வைத்து, பதிலடி கொடுத்து உள்ளது.பிரச்னைக்கு தீர்வு காண பேச்சு நடந்து வரும் நிலையில், பீரங்கிகளை சீனா நிறுத்தி வைத்துள்ளது, அந்நாட்டின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X