பொது செய்தி

தமிழ்நாடு

குதிரை சாகச போட்டி :ஊட்டி சிறுவனுக்கு வெண்கலம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
ஊட்டி:டில்லியில் நடந்த குதிரை சாகச போட்டியில், ஊட்டி சிறுவனுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.டில்லியில், டிச., 21ம் தேதி, அகில இந்திய குதிரை சாகச போட்டி நடந்தது. அதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து, 700 குதிரை சாகச வீரர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் நீல் கெண்டல், 11, ஜூனியர் பிரிவில், வெண்கல பதக்கம் வென்றார். கலெக்டர் மாணவருக்கு

ஊட்டி:டில்லியில் நடந்த குதிரை சாகச போட்டியில், ஊட்டி சிறுவனுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.டில்லியில், டிச., 21ம் தேதி, அகில இந்திய குதிரை சாகச போட்டி நடந்தது. அதில், பல்வேறு மாநிலங்களிலிருந்து, 700 குதிரை சாகச வீரர்கள் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த, 6ம் வகுப்பு மாணவர் நீல் கெண்டல், 11, ஜூனியர் பிரிவில், வெண்கல பதக்கம் வென்றார். கலெக்டர் மாணவருக்கு பாராட்டு தெரிவித்தார்.நீல் கெண்டல் கூறுகையில்,''குதிரை சாகச போட்டியில் பங்கேற்பதற்காக, இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றேன். டில்லியில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்று, ஜூனியர் பிரிவில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. ''அனைத்து வயதினருக்கான போட்டியில் பங்கேற்று, தங்க பதக்கம் வெல்ல பயிற்சி மேற்கொண்டு வருகிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X