பொது செய்தி

தமிழ்நாடு

தப்புவதற்கு 'காய்' நகர்த்தும் 'கருப்பு ஆடுகள்

Updated : ஜன 05, 2021 | Added : ஜன 05, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் பத்திரப்பதிவு துறையில் நடந்த ரசீது முறைகேடு தொடர்பாக, வழக்குபதிவு செய்ய போலீசார் தாமதிப்பதால், 'கருப்பு ஆடுகள்', வழக்கில் இருந்து தப்புவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர்.திருப்பூர் மாவட்ட பதிவுத்துறையில் ஜாயின்ட் -1 மற்றும் 2 அலுவலகங்கள் உட்பட, ஆறு சார்-பதிவாளர் அலுவலகங்களில், 68 லட்சத்து, 70 ஆயிரத்து, 657 ரூபாய் 'ஆன்லைன்' ரசீது முறைகேடு

திருப்பூர்: திருப்பூர் பத்திரப்பதிவு துறையில் நடந்த ரசீது முறைகேடு தொடர்பாக, வழக்குபதிவு செய்ய போலீசார் தாமதிப்பதால், 'கருப்பு ஆடுகள்', வழக்கில் இருந்து தப்புவதற்கு காய் நகர்த்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட பதிவுத்துறையில் ஜாயின்ட் -1 மற்றும் 2 அலுவலகங்கள் உட்பட, ஆறு சார்-பதிவாளர் அலுவலகங்களில், 68 லட்சத்து, 70 ஆயிரத்து, 657 ரூபாய் 'ஆன்லைன்' ரசீது முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இணை சார்-பதிவாளர்கள், உதவியாளர்கள் உட்பட, ஏழு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.சிறப்பு குழு விசாரணையில், தமிழகம் முழுவதும், ஒரு கோடியே, 23 லட்சத்து, 93 ஆயிரத்து, 227 ரூபாய் ரசீது முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முறைகேடு தொடர்பாக, உதவியாளர்கள் சங்கர், பன்னீர்செல்வம் மீது திருப்பூர் ஏ.ஐ.ஜி., ராமசாமி அளித்த புகாரின் பேரில், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.புகார் அளிக்கப்பட்டு ஒரு மாதமாகி உள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல், போலீசாரின் விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

பதிவுத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், 'வழக்கு பதிவு செய்வதில், காலதாமதம் காரணமாக, சார்-பதிவாளர்கள் சிலர், தங்களை தற்காத்து கொள்ளும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், ஆதாரங்கள் அழிக்கவும் வாய்ப்பு உள்ளது. வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிக்க காய் நகர்த்தி வருகின்றனர். விரைந்து வழக்குப்பதிவு செய்வதோடு, போலீஸ் தரப்பிலும் தணிக்கைக்குழு அமைக்க வேண்டும்' என்றனர்.


30 பேரிடம் விசாரணை


திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகனிடம் கேட்டதற்கு, ''முறைகேடு குறித்து அளித்த புகாரில் உள்ள தொகையை விட, தற்போது 'ஆடிட்' செய்து வழங்கப்பட்ட விபரத்தில், தொகை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏ.ஐ.ஜி., மற்றும் தணிக்கை குழுவினர், சம்பந்தப்பட்ட பத்திரங்களை பதிவு செய்தவர்கள் உட்பட, 30 பேரிடம் இதுவரை விசாரணை நடந்துள்ளது. முழுமையான விசாரணை முடிந்த பின் வழக்குப்பதிவு செய்யப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X