சென்னை : பயிர் நிவாரணம் பெறும் விவசாயிகளின் பட்டியலை சரிபார்க்கும் பணிகளில் வேளாண் துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
டிசம்பரில் உருவான 'நிவர் புரெவி' புயல்களால் தமிழகத்தில் பயிர்கள் பாதிக்கப்பட்டு 5 லட்சம் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு 600 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்புக்கு 2.5 ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய்; நீண்ட கால பயிர் பாதிப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.மாவட்ட வாரியான பயிர் பாதிப்பு பட்டியல் கலெக்டர்கள் வாயிலாக சென்னையில் உள்ள வேளாண் துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபரங்களை தனி குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிவாரணம் வழங்குவது குறித்து பேரிடர் மேலாண்மை ஆணையர் பனீந்தர்ரெட்டி வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இயக்குனர் தட்சிணாமூர்த்தி தோட்டக்கலைத் துறை இயக்குனர் சுப்பையன் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். வரும் 7 ம்தேதி முதல் பயிர் நிவாரணம் வழங்கும் பணிகளை துவக்கி ஒரு வாரத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE