பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு பணிகளுக்கு மேலும் 89 பேர் பரிந்துரை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. மேலும் 89 பேரை மத்திய அரசு பணிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.கடந்த 2019ல் யு.பி.எஸ்.சி. நடத்திய மத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவு 2020 ஆக.4ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்வானோரின் தர வரிசைப்படி ஐ.ஏ.எஸ். - ஐ.எப்.எஸ். - ஐ.பி.எஸ். - குரூப் ஏ, குரூப் பி பணிகளில் 927 காலியிடங்களுக்கு 829 பேரை யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது. இந்நிலையில்

புதுடில்லி : மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. மேலும் 89 பேரை மத்திய அரசு பணிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2019ல் யு.பி.எஸ்.சி. நடத்திய மத்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளின் முடிவு 2020 ஆக.4ல் வெளியிடப்பட்டது. இதில் தேர்வானோரின் தர வரிசைப்படி ஐ.ஏ.எஸ். - ஐ.எப்.எஸ். - ஐ.பி.எஸ். - குரூப் ஏ, குரூப் பி பணிகளில் 927 காலியிடங்களுக்கு 829 பேரை யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்தது. இந்நிலையில் நேற்று மேலும் 89 பேர் மத்திய அரசு பணிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த வகையில் பொதுப் பிரிவில் 73 பேர் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 14 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் எஸ்.சி. பிரிவில் தலா ஒருவரை மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு யு.பி.எஸ்.சி. பரிந்துரைத்துள்ளது.

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 89 பேரின் விபரங்களை http//www.upsc.gov.in வலைதளத்தில் காணலாம் என யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X