பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு கோவையில் ஜன.18ல் துவக்கம்

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கோவை : ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலை விளையாட்டரங்கில் ஜன. 18 முதல் 30 வரை நடக்கிறது. கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் இருந்து ஆட்களை சேர்க்க முகாம் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நுழைவுச்சீட்டு www.joinindianarmy.nic.in என்ற

கோவை : ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கோவை பாரதியார் பல்கலை விளையாட்டரங்கில் ஜன. 18 முதல் 30 வரை நடக்கிறது.

கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் கீழ் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உட்பட 11 மாவட்டங்களில் இருந்து ஆட்களை சேர்க்க முகாம் நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். நுழைவுச்சீட்டு www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் தலைமையில் நடந்தது. 'அதிக அளவில் நபர்கள் கூடுவதை தடுக்க 500 நபர் கொண்ட குழுவாக நான்கு வெவ்வேறு இடங்களில் அனுமதிக்கப்படுவர்.

முகாமில் வேலை பெற்றுத்தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். தகுதியின் அடிப்படையின் இத்தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 0422-2222022 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்' என கலெக்டர் ராஜாமணி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X