பொது செய்தி

தமிழ்நாடு

7970 பேருக்கு தொடருது சிகிச்சை

Added : ஜன 05, 2021
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 7970 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள 241 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று 60 ஆயிரத்து 502 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சென்னையில் 229 பேர் உட்பட 838 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.இதுவரை 1.44 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் எட்டு லட்சத்து 21

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரில் 7970 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள 241 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று 60 ஆயிரத்து 502 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சென்னையில் 229 பேர் உட்பட 838 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.இதுவரை 1.44 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் எட்டு லட்சத்து 21 ஆயிரத்து 550 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளது. சென்னையில் 267 பேர் உட்பட 985 பேர் நேற்று குணமடைந்தனர்.இவர்களையும் சேர்த்து எட்டு லட்சத்து 1414 பேர் சிகிச்சை முடித்து வீடு திரும்பினர். தற்போது 7970 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று 10 பேர் உட்பட இதுவரை 12 ஆயிரத்து 166 பேர் இறந்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து நவ. 25 முதல் வந்தவர்களில் 2146 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 20 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X