தமிழக நிகழ்வுகள்: -
1. 6 பவுன் காயின் திருட்டு: போலீசார் விசாரணை
மேட்டுப்பாளையம்: காரமடையில் நகை கடையின் உரிமையாளரை, கீழே தள்ளிவிட்டு மர்ம நபர், 6 பவுன் தங்க காயின்கள் திருடிச் சென்றுள்ளார். அப்போது கடையின் உள்ளே இருந்த வாலிபர் விற்பனைக்கு வைத்திருந்த, 6 ஒரு பவுன் தங்க காயின்களை எடுத்து கொண்டு தப்பினார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இக்காட்சிகளை, கடை உரிமையாளர், காரமடை போலீசில் ஒப்படைத்தார்.காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ., நாகராஜ் ஆகியோர், தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.

2. கடத்தப்பட்ட சிறுமி மீட்பு: ஒருதலை காதல் விபரீதம்
திருப்பூர்: காதலை ஏற்க மறுத்த, 17 வயது சிறுமியை, காரில் கடத்தி சென்ற, இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் போலீசிடம் சிக்கினர். சிறுமி மீட்பு தொடர்பாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரையும் அம்மாநில போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினர்.
3. கழிவு கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, கழிவுகளை கொட்ட வந்த லாரிகளை, கிராம மக்கள் சிறைபிடித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு, 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என போலீசார் உறுதியளித்த பின், கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த லாரி டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, லாரி டிரைவர்கள் வேலுசாமி, வடிவேல், சிவக்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. 'நீட்' மதிப்பெண் சான்றிதழ் மோசடி
சென்னை : 'நீட்' தேர்வு மதிப்பெண் சான்றிதழை, போலியாக தயாரித்து கொடுத்தது தொடர்பாக, இடைத்தரகரை போலீசார் தேடி வருகின்றனர்.
5. ரூ.40 லட்சம் சீட்டு மோசடி
திருப்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், எஸ்.ஆர்., நகர் பகுதியில் உள்ள, தனியார் சீட்டு நிறுவனத்தில், மாத சீட்டு சேர்ந்திருந்தனர். முழு தவணை செலுத்திய பிறகும், சீட்டுப்பணத்தை ஒப்படைக்காமல் ஏமாற்றுவதாக பாதிக்கப்பட்ட மக்கள், நேற்று கலெக்டரிடம் புகார் அளிக்க வந்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'மொத்தம், 15 நபர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். ஏமாற்றிய நிறுவனத்திடம் இருந்து, பணத்தை மீட்டுத்தர வேண்டும்,' என்றனர்.

6. வழிப்பறி வழக்கில் 4 பேர் கைது
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் வடஇந்திய வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில் எஸ்.எஸ்.ஐ., மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
7. வீடுகள் சேதம்: 6 பேர் கைதுகமுதி : கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியைசேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருக்கும் தேர்தல் முன்பகை இருந்து வந்தது. ஆத்திரமடைந்த பெருமாள் தரப்பை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் மாரிமுத்து, உறவினர்கள் வீட்டை சேதப்படுத்தி உள்ளனர். மாரிமுத்து மனைவி பாக்கியம் காயமடைந்து சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பெருமாள் குடும்பன்பட்டியைச் சேர்ந்த பெருமாள் உட்பட 21 பேர் மீது வழக்குபதிவு செய்து காளிராஜ், சுந்தரபாண்டி,கருப்பையா,தங்கபாண்டி,வேல்முருகன், தங்கபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் குற்றங்கள் :-
3 அதிகாரிகள் கைது
காஜியாபாத்: உத்தர பிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டம் முராத் நகர், மயான மேற்கூரை, நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில், 25 பேர் பலியாயினர்; 17 பேர் காயமடைந்தனர். இழப்பீடு மற்றும் அரசுப்பணி கோரி, பலியானோர் உறவினர்கள், டில்லி - மீரட் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மயானக்கூரை இடிந்து விழுந்த வழக்கில், 'ஜூனியர் இன்ஜினியர்' உட்பட மூன்று அதிகாரிகளை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

நக்சலைட் கைது
பீஜப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூரை சேர்ந்த நக்சலைட் பூனம் பிந்தா, 48, போலீசார் மீதான தாக்குதல், பொதுமக்கள் கடத்தல் உட்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டார். தலைக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்ட பூனம் பிந்தாவை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.--
உலக நடப்பு :-
பாதிரியார் சுட்டுக்கொலை
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில், நேற்று முன்தினம், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், பாதிரியார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த தாக்குதலில், மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர். இது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நைஜரில் 100 பேர் கொலை
நியாமே: ஆப்ரிக்க நாடான நைஜரின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, சோபாங்கவு மற்றும் ஜாரவும்டாரேயே என்ற, இரண்டு கிராமங்களுக்குள், நேற்று முன்தினம், மத பிரிவினைவாதிகள் புகுந்தனர். கிராமங்களில், கண்ணில் தென்பட்ட அனைவர் மீதும், கண்மூடித்தனமாக தாக்குதல்களை அரங்கேற்றினர். இந்த கொடூரமான தாக்குதல்களில், 100 பேருக்கும் அதிகமானோர்உயிரிழந்தனர். பலரும் காயமடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE