சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்தல் 2 பேர் கைது

Added : ஜன 05, 2021
Share
Advertisement
கடலுார் - புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக சாராயம் கடத்தப்படுவதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வாகன சோதனையில்

கடலுார் - புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரியில் இருந்து கடலுார் வழியாக சாராயம் கடத்தப்படுவதாக கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையில் சிறப்பு தனிப்படை உதவி ஆய்வாளர் சுதாகர், ரவிச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினர், மஞ்சக்குப்பம் மணிகூண்டு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது பதிவெண் இல்லாத மாருதி 800 காரை சோதனை செய்தனர். அதில், 5 பிளாஸ்டிக் பைகளில் 30 லிட்டர் வீதம் 150 லிட்டர் சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.காரில் இருந்த கடலுார் அடுத்த குறவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகள் வனிதா, 33; கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி, 31; ஆகிய இருவரையும் கைது செய்து, சாராயம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X